நியூசிலாந்து: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தற்காலிக தடையை நியூசிலாந்து இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தற்காலிக தடை விதிக்கும் விதமாக ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து நியூசிலாந்து செல்லும் விமானங்கள் நிறுத்தப்படும் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


நியூசிலாந்து பிரதமர் ( Jacinda Ardern) செய்தியாளர் கூட்டத்தில், இந்தியாவில் இருந்த எவரும் ஏப்ரல் 28 வரை நியூசிலாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று கூறினார். இந்த தடை இந்தியாவில் வசிக்கும் நியூசிலாந்து குடிமக்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என பிரதர் ஆர்டெர்ன் கூறினார். 


தற்காலிக தடை நியூசிலாந்து குடிமக்கள் மற்றும் தற்போது இந்தியாவில் வசிக்கும் குடிமக்களை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டதாக பிரதமர் கூறினார். ஆனால் "பயணிகளுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக தான், இந்த தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. எனவே குடிமக்கள் தங்கள் பொறுப்பு மற்றும் கடமை உணர்வை உணர வேண்டும்" எனவும் கூறினார்.


இன்று வெளிநாடுகளில் இருந்து வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் இந்தியாவில் இருந்து வந்த 17 பேர் அடங்குவார்கள். இதன் காரணமாக தான், இந்தியாவில் இருந்து வருவோருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


இன்று (வியாழக்கிழமை) இந்தியாவில் 126,789 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதைத் தொடர்ந்து ஒரே நாளில் அதிகபட்சமாக பாதிப்பு ஏற்பட்டது இதுதான்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR