Road accident: கடும் பனிமூட்ட எச்சரிக்கை! இறுதி ஊர்வலத்தில் மோதிய டிரக்! 19 பேர் பலி
Accident in China: சீனாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியானார்கள் மேலும் 20 படுகாயத்திற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது
China Accident: பனிமூட்டம் காரணமாக உலகம் முழுவதும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இன்று அதிகாலை சீனாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியானார்கள் மேலும் 20 படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் குளிரும் பனிமூட்டமும் அதிக அளவில் இருக்கும் நிலையில் இறுதி ஊர்வத்தின் மீது மோதிய டிரக்கால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டத்தினால், புலப்பாடு குறைவாக இருந்ததால், இந்த விபத்து நடைபெற்றதாக தெரிகிறது. சாலையில் சென்றுக் கொண்டிருந்த டிரக் ஒன்று, சவ ஊர்வலத்தில் மோதியதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள சென்றவர்கள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | ஹஜ் பயணம் செல்லுபவர்களுக்கு நற்செய்தி! சவூதி அரசின் முக்கிய அறிவிப்பு!
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி மாகாண அரசு செய்தி வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்று காலை, இறுதிச் சடங்குகளுக்கு செல்வதற்கு முன்னர், சாலையோரத்தில் இருந்தவர்களுக்கு உணவு விநியோகம் செய்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் என்று தெரிகிறது.
விபத்து நடந்த பகுதியில் "பனிமூட்டம் அதிகமாக" நிலவுவதாகக் கூறிய நஞ்சாங் மாவட்டப் போக்குவரத்துக் காவல் துறையினர், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேகத்தைக் குறைத்து, கவனமாக வாகனங்களை ஓட்டவும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம் என்றும் சீனாவின் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | மாட்டிறைச்சி சாப்பிடுவது உடலுக்கு கெட்டதா... சர்ச்சையை விட சத்து ஜாஸ்தி!
சீனாவில் போக்குவரத்துக்கான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்வாக இருப்பதால், அங்கு சாலை விபத்துகள் தொடர்வது, அதிலும் குறிப்பாக பனிக்காலத்தில் விபத்துகள் அதிகரிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
டிரக் திடீரென ஊர்வலத்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிக அளவில் பயணிக்கும் இந்த சமயத்தில் நடந்த விபத்து, எச்சரிக்கையாக பயணிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது.
ஏற்கனவே கோவிட் தாக்கத்தால் மக்கள் துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில், விபத்துக்களும் கவலைகளை அதிகரித்து வருகின்ரான. மூடுபனி நிலவுவதால், குறைந்த தெரிவுநிலை காரணமாக மத்திய சீனாவில் கடந்த மாதம், நூற்றுக்கணக்கான வாகனங்கள் மோதிய விபத்தில் 27 பயணிகள் இறந்தனர்.
மேலும் படிக்க | Coronavirus: சீனாவில் களியாட்டம் போடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜப்பான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ