Health Benefits of Beef : இந்தியாவில் உணவு, உடை , உறைவிடம் என்ற அடிப்படை உரிமைகள் சார்ந்து பல்வேறு மாறுப்பட்ட கருத்துகள் நிலவினாலும் அதன் மீதான உண்மைத்தன்மையை உறுதிசெய்வது என்பது அவசியமாக உள்ளது. பல தரப்பட்ட வாழ்வியலை கொண்ட மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் ஒரே ஒரு உணவு முறையை பின்பற்றுவது என்பது சட்டப்படி குற்றமாகவே கருதப்பட வேண்டும்.
அந்த வகையில், இந்திய சமூகத்தில் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் எப்போதும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியில் அதை அணுகுவது ஒருபுறம் இருக்க, இந்தியா போன்ற நாடுகளில் மாட்டிறைச்சி உள்ள உட்டச்சத்துகள் குறித்து விளக்குவதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
ஏன் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும்?
மாட்டிறைச்சி மற்ற இறைச்சிகளை விட எந்த விதத்தில் அதிக சத்துகளை பெற்றுள்ளது, மாட்டிறைச்சியால் கிடைக்கக்கூடிய உட்டச்சத்துகள் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எந்தளவிற்கு பயனளிக்கும் என்பது சமானிய மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், மாட்டிறைச்சியை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
மேலும் படிக்க | நுங்கு சாப்பிட்டா 'அது பெரிதாகுமா' தெரியாது... ஆனா இவ்வளவு நல்லது இருக்கா?
மாட்டிறைச்சியில் இயற்கையாகவே புரதச்சத்து நிறைந்துள்ளது. புரதச்சத்து நிறைந்துள்ளது என்பாதல் அவற்றை உட்கொண்டால் தசைகள் வலுபெறும். மாட்டிறைச்சி இரும்பு மற்றும் நான்கு அத்தியாவசிய வைட்டமின்களை வழங்குகிறது. அதாவது, நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின்கள் B6 மற்றும் B12 இதில் அடக்கம். இது உங்கள் உடல் சோர்வைக் குறைக்க உதவுகிறது.
மாட்டிறைச்சி நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும் எட்டு அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்களை கொண்டுள்ளது. மாட்டிறைச்சியில் துத்தநாகம் நிறைந்து காணப்படுகிறது. இது முடி, நகங்கள் மற்றும் தோலை சீராக வைத்திருப்பதில் உதவுகிறது.
'அந்நியப்படுத்தாதீர்'
துத்தநாகம் அறிவாற்றல் செயல்பாடு, கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கு உதவுகிறது. ரத்தத்தில் இயல்பான டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் மாட்டிறைச்சியில் இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு வேலை செய்ய உதவுகிறது.
சமீபத்தில், இணையத்தில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறு என்ற ரீதியிலும், அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. அதிக உடல் உழைப்பு இருக்கும் இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது இயல்பானதுதான். அதை உட்கொள்வதால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவதா, தவறனா கருத்துகளை பகிர்வதோ சரியாகாது. இதன்மூலம் எளிதாக கிடைக்கும் உட்டச்சத்துகள் பொதுமக்களை விட்டு அந்நியப்படுத்தப்படுவது நியாயமற்றது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss: இது போதும்..வெறும் 10 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ