அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான வட கொரிய தலைவர் கிம்-ன் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெறவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறை ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில்... "அமைதியை ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது" என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த சந்திப்பிற்கு பின்னர் வட கொரிய தலைவர் கிம், அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சந்திப்பின் பேச்சு வார்த்தை முடிவில், கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவச் செய்தல், அணு ஆயுத ஒழிப்பு ஆகியவை இந்தப் பேச்சின் முக்கிய அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பேச்சுவாத்தையின் மூலம் வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இந்நிலையில், நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் சிங்கப்பூர் சென்றனர். நாளை காலை 9 மணியளவிர் இருநாட்டு தலைவர்களுக்கு இடையே சந்திப்பு முடிந்தப் பின்னர் நாளை இரவு சிங்கபூரில் இருந்து அமெரிக்காவிற்கு அதிபர் டிரம்ப் புறப்படுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக இரவு 8 மணியளவில்(சிங்கப்பூர் நேரப்படி), அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் புதன் அன்றே அமெரிக்கா திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 11 மணி நேரம் முன்னதாகவே அமெரிக்கா திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.