துருக்கி தேர்தலில் இழுபறி நிலை... 20 வருட கால அதிகாரத்தை தக்க வைப்பாரா எர்டோகன்!
துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்றாலும், இங்கும் ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 1923ல் ஜனநாயக நாடாக உருவான துருக்கி, தன் 100வது ஆண்டில் காலடி வைத்திருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தேதியில் புவிசார் அரசியலில் பரபரப்பாக நோக்கப் படுவது துருக்கியில் நடக்கும் தேர்தல். இதன் முடிவுகள் உலக நடப்பிற்கும், இந்தியாவுக்கும் கண்டிப்பாக பாதிப்பு உள்ளது என்பதால், உலக நாடுகள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. காரணம் துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் குறித்து துருக்கி தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்து வருகிறது. துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்றாலும், இங்கும் ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 1923ல் ஜனநாயக நாடாக உருவான துருக்கி, தன் 100வது ஆண்டில் காலடி வைத்திருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த தேர்தலில் மொத்தம் 6 கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் 50%க்கு அதிகமான வாக்குகளை பெறும் கட்சியின் தலைவர் மட்டுமே அதிபராக முடியும்.
அதிபர் பதவிக்கான இரண்டாவது தேர்தல்
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கியில் நேற்று, அதாவது மே 15ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற்றது. துருக்கியில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் துருக்கி அதிபர் தய்யீப் எrடோகனுக்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான துருக்கியின் காந்தி என அழைக்கப்படும் கெமல் கிளிக்டரோக்லுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. துருக்கியில் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனோ அல்லது அவரது போட்டியாளரான கெமல் கிளிக்டரோக்லுவோ ஞாயிற்றுக்கிழமை 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாததால், இப்போது மே 28 ஆம் தேதி அதிபர் பதவிக்கான இரண்டாவது தேர்தல் நடைபெறும். எந்த கட்சியும் 50% பெறவில்லை எனும் நிலையில், முதலிரண்டு அதிக வாக்கு சதவிகிதம் பெற்ற, கட்சிகளுக்கு இடையே, மீண்டும் தேர்தல் நடக்கும். அதில் 50% கடக்கும் கட்சி ஆட்சி அமைக்கும் உரிமை பெறும். இந்தத் தேர்தலின் முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
மேலும் படிக்க | துருக்கி தேர்தல்... துருக்கியின் காந்தி அதிபர் எர்டோகனை வீழ்த்துவாரா...!
எர்டோகன் வெளியிட்ட கருத்து
வாக்கு எண்ணிக்கையில், 94.24 சதவீத வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டதில், 49.59 சதவீத வாக்குகள் எர்டோகனுக்கும், 44.67 சதவீத வாக்குகள் கிளிக்டரோக்லுவுக்கும் கிடைத்ததாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டவுடன் எர்டோகன் தனது ட்விட்டர் பதிவில், “ஜனநாயகத்தின் பெயரால் வாக்களித்த மற்றும் தேர்தலில் பங்கேற்ற அனைத்து குடிமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது வேட்பாளரான சினான் ஓகன் கிட்டத்தட்ட ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்று தனது போட்டியாளர்களுக்கு தெளிவான வெற்றி கிடைக்காமல் தடுத்து இருக்கிறார். இப்போது அவர் யாரை ஆதரிக்கிறார் என்பதுதான் முக்கியம்” என பதிவிட்டுள்ளார்.
எர்டோகனுக்கு இருக்கும் சவால்
துருக்கி அதிபர் எர்டோகன் தனது இரு தசாப்த கால ஆட்சிக் காலத்தில் இந்தத் தேர்தல் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. கொரோனா காலத்தை தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் போரினால், துருக்கி பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப் பட்டுள்ளது. விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. துருக்கி பணம் லிராவின் மதிப்பு 80% வீழ்ந்துள்ளது. ஒரு டாலருக்கு 6 லிரா என்று இருந்த நிலையில், தற்போது 20 லிராவாக உள்ளது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பெரும் பாதிப்பும், அதிகமானோர் இறந்தனர். ஆனால் எர்டோகன் தன்னுடைய கொள்கைகளை மாற்ற தயாராக இல்லை மற்றும் அதிக ஊழல் நடக்கிறது என்பதால், அதிகமானோர் பெரும் அவர் ஆட்சியின் மீது கடும் அதிருப்தியை கொண்டுள்ளனர். எர்டோகன் இன்னும் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பாரா அல்லது குடியரசுக் கட்சியின் தலைவரும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளருமான கிளிக்டரோக்லு வெற்றி பெறுவாரா என உலகமே குறிப்பாக மேலை நாடுகள் மிகவும் ஆர்வமாக கவனித்து வருகின்றன.
கிலிக்டரோக்லுவின் வாக்குறுதிகள்
கிலிக்டரோக்லுவின் ஆறு கட்சிக் கூட்டணியான நேஷன் அலையன்ஸ், தாங்கள் அளித்த வாக்குறுதியில், ஜனாதிபதி முறைமையை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் பாராளுமன்ற ஜனநாயக முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது. எர்டோகனின் ஆட்சியின் கீழ் பெரிது பாதிக்கப்பட்டுள்ள நீதித்துறை மற்றும் மத்திய வங்கியின் சுதந்திரத்தை நிலைநாட்டவும், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடு மீதான கட்டுப்பாடுகளை நீக்கவும் என உறுதியளித்துள்ளன.
மேலும் படிக்க | கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்! பல தசாப்தங்களாக தொடரும் கைதுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ