ரஷ்ய அதிபரைக் கொல்ல கிரெம்ளின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது உக்ரைன்: ரஷ்யா புகார்

Drones Attacks On Kremlin: உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் கிரெம்ளின் மீது தாக்குதல் நடத்தியதால், புடின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாக ரஷ்யா கூறுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 3, 2023, 06:56 PM IST
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்ய உக்ரைன் முயற்சி
  • உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் கிரெம்ளின் மீது தாக்குதல்
  • படுகொலை முயற்சியில் இருந்து அதிபர் புடின் தப்பித்தார்
ரஷ்ய அதிபரைக் கொல்ல கிரெம்ளின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது உக்ரைன்: ரஷ்யா புகார் title=

மாஸ்கோ: இரவோடு இரவாக உக்ரேனிய ஆளில்லா விமானங்களால் கிரெம்ளின் மாளிகை தாக்கப்பட்டதாக கிரெம்ளின் கூறியுள்ளது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்வதற்கான முயற்சி இது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கிரெம்ளின் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்பவர்களால் பகிரப்பட்ட காட்சிகள் கிரெம்ளினுக்கு மேலே வானில் புகைமண்டலம் இருப்பதைக் காட்டுகிறது.

 இந்த சம்பவம் "திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்" மற்றும் " ரஷ்ய அதிபர் மீது படுகொலை முயற்சி" என்று கிரெம்ளின் விவரித்துள்ளது. ஒரே இரவில் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாஸ்கோ, இது "பழிவாங்கும் நடவடிக்கைகள்" என சொல்கிறது.

"கியேவ் ஆட்சி ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் கிரெம்ளின் இல்லத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இரண்டு ட்ரோன்கள் கிரெம்ளினை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தின" என்று கிரெம்ளின் செய்தி சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இந்த நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்ட பயங்கரவாதச் செயலாகவும், ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் உயிருக்கு எதிரான முயற்சியாகவும் கருதுகிறோம், வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9 அணிவகுப்பு நடத்தவிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது," என்று கிரெம்ளின் கூறியது, தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில், அங்கு புடின் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி சவால்.. திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா?

"கிரெம்ளின் மீதான தாக்குதல் முயற்சிக்கு பொருத்தமான நேரத்தில்பதிலளிக்கும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குற்றச்சாடு குறித்து உக்ரேனிய அதிகாரிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் கிரெம்ளின் மாளிகையின் பின் பகுதியில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், அதன் பிறகு விளக்குகள் அணைந்துவிட்டதாகவும் மாஸ்கோவாசிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் குடியிருப்பாளர்களால் பகிரப்பட்ட காட்சிகள் கிரெம்ளினுக்கு மேலே வானத்தில் புகை சூழ்ந்திருப்பது தெரிகிறது. இரண்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் நடத்திய வெட்கக்கேடான தாக்குதல் இது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர், தாக்குதல் நடத்திய இரண்டு ட்ரோன்களும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. 

உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. முன்னாள் சோவியத் யூனியன் அரசுகள், நாஜி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும். ரஷ்யா மே 9 இரண்டாம் உலகப் போரின் வெற்றி நினைவு தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக  கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துள்ளது.தற்போது ட்ரோன் தாக்குதல்கலைத் தொடர்ந்து, பாதுகாப்புக் கவலைகள் அதிகரித்துள்ளது.

(பொறுப்புத் துறப்பு: உக்ரைன்-ரஷ்யா மோதலில் நிலத்திலும் ஆன்லைனிலும் பல உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்களும் செய்யப்படுகின்றன. அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும் இந்தச் செய்தியைத் துல்லியமாகப் புகாரளிப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டாலும், அனைத்து அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியாது)

மேலும் படிக்க | விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News