மியான்மர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்கள் வா லோன், கியாவ் ஓ... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற 2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 16 மாதங்களாக சிறையில் உள்ளனர். 


இதனைத்தொடர்ந்து அந்த தீர்ப்புக்கு எதிராக மியான்மர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, கடந்த மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தது. 


செய்தியாளர்கள் இருவரும் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும், அவர்கள் ஈடுபட்டதாற்காகான ஆதாரம் எதுவும் இல்லையென்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்த நிலையில், அவர்களின் மனைவி இருவரும் தங்கள் கணவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மியான்மர் அரசுக்கு கடிதம் எழுதினர். 


இந்நிலையில் வா லோன், க்யா சியோ ஆகிய இருவரும், சிறையிலிருந்து விடுதலை அடைந்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 500 நாட்களுக்கு பிறகு அவர்கள் அதிபரின் பொதுமன்னிப்பு அடிப்படையில் வெளியே வந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.