பிரிட்டன் பார்லிமென்டில் துப்பாக்கிச்சூடு: 4 பலி
பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் துபாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.
லண்டன்: பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் துபாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.
பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லிமென்ட் வாளகம், வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பார்லிமென்ட் வளாகத்தினை நோக்கி செல்லும் சாலைகள் மூடப்பட்டன. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மணை மூடப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.