இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு காலக்கட்டத்தில், கேளிக்கை விருந்தில் பங்கேற்றது, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவக்கு முக்கிய பதவிகொடுத்தது ஆகியவை சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனுக்கு, அவரது கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினமாஅ செய்யத் தொடங்கினர். இதை அடுத்து, கடந்த 7-ந் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். எனவே புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை இங்கிலாந்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில்  ஈடுபட்டு வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்தின் முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ரிஷி சுனக் பிரதமர் மூன்றாம் சுற்று வாக்குப்பதிவில் 115 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார். 


மேலும் படிக்க |  UK PM: இங்கிலாந்தின் பிரதமராவாரா இந்திய வம்சாவளி ரிஷி சுனக்: பிரசாரம் தொடங்கியது


புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் அமைச்சர்கள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்த நிலையில், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் ரிஷி சுனக் உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர்.


வணிகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் 88 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் 71 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார். கெமி படேனோக் 58 வாக்குகள் பெற்றுள்ளார். புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5ம் தேதி அறிவிக்கப்படும்.


இதனிடையே தனக்கு ஆதரவு திரட்டும் வகையில், ரிஷி சுனக் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டா நிலையில்,  விவாதத்தின் போது ரிஷி சுனக்கிற்கு பின்னால், பிரச்சாரத்தை குறிப்பிடும் வகையில், கேம்பைன் (campaign) என்ற வார்த்தை CAMPIAIGN என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. இதை அடுத்து நெட்டிசன்கள் அவரை டிரோல் செய்யத் தொடங்கினர்.  இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ஆசைப்படும் ஒருவர் இவ்வளவு அஜாக்கிரதையாக ஸ்பெல்லிங் தவறுகளை எப்படி கவனிக்காமல் தவறினார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  


கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வரி விதிப்பு தொடர்பாக ரிஷி சுனக் எடுத்த நடவடிக்கையை பல தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அவர்களது விமர்சனத்திற்கு தீனி போடும் வகையில் மற்றொரு சம்பவமாக இது அமைந்தது. இதேபோல் இன்போசிஸ் நிறுவனர் நாராயண் மூர்த்தி மகளும் ரிஷி சுனக் மனைவியுமான அக்‌ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுட்டதாகவும் ரிஷி சுனக்கிற்கு எதிரான விமர்சனங்களில் ஒன்றாக வைக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே 'வேலை தேடும்' போரிஸ் ஜான்சன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ