உக்ரைன் எல்லையில் பல மாதங்களாக படைகளை குவித்திருந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. கடந்த 40 நாட்களாக ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் சுமார் 40 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர்.  ஆயிரக்கணக்கான வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பின்வாங்கி உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் கவனம் செலுத்துவதாக ரஷ்யா கடந்த வாரம் அறிவித்தது. ரஷ்ய வீரர்கள் வெளியேறிய பின் புச்சா பகுதிக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள தெருக்களில் பொதுமக்களின் உடல்கள் சிதறிக்கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரஷ்யா போர்க்குற்றம் இழைத்ததாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உக்ரைன் போரை நிறுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றலாம்: ஐநா தலைமை செயலர்


ரஷ்ய வீரர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பெண்களை சித்ரவதை செய்வதாக உக்ரைன் எம்.பி. லெசியா வேசிலென்க் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரஷ்ய வீரர்கள் கொள்ளையடிப்பதோடு, 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து  வருவதாகவும், பெண்களின் உடலில் நெருப்பினால் ஸ்வஸ்டிக் முத்திரையை வரைந்து சித்ரவதை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பெண் ஒருவரின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லெசியா வேசிலென்க், தான் பேச்சற்ற நிலையில் உள்ளதாகவும், தனது மனம் முழுவதும் வெறுப்பாலும், கோபத்தாலும், பயத்தாலும் நிரம்பியுள்ளதாகவும், ரஷ்யா ஒழுக்கமற்ற, குற்றவாளிகளின் தேசம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 



மேலும் படிக்க | உக்ரைனின் லிவிவ் நகரை தாக்கிய ரஷ்ய ஏவுகணை; பற்றி எரியும் எரிபொருள் கிடங்கு!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR