பல்வேறு நாடுகளின் எதிர்பினையும் மீறி ஏவுகணை சோதனையில் ஈடுப்பட்டு வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஐ.நா சபை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எதிர்ப்பினை மீறி ஏவுகணை பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருவதினை அடுத்து அந்நாட்டுக்கு ஐ.நா. அமைப்பு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.


முன்னதாக, அமெரிக்காவின் மையத்தினை தாக்கும் வலிமை தங்களிடம் உள்ளதாக வடகொரியா தெரிவித்தது.  இதனால் அதிர்ச்சியடைந்தது அமெரிக்கா, ஏவுகணை பரிசோதனை செய்ய வடகொரியா-விற்கு தடைசெய்யும் முயற்சியாக அந்நாடு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு செய்தது.


இதற்கான வரைவு கொள்கை ஒன்றை அமெரிக்கா கொண்டுவந்தது. இந்த வரைவு கொள்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டன.  


இதனால் 90% சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை, வடகொரியா இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது!