வீட்டுக்கு ஒரு விமானம் இருக்கும் விந்தை: அச்சரியப்படுத்தும் அமெரிக்க நகரம்
அமெரிக்காவின் ஒரு நகரில் அனைவரது வீட்டிலும் ஒரு விமானம் இருப்பது பொதுவான விஷயம். இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள். இவர்களுக்கு விமானங்கள் மீது எவ்வளவு காதல் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் அனைவரும் கூடி உள்ளூர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள்.
ஒரு நகரில் வசிக்கும் அனைவரிடமும் கார்கள் இருப்பது சாதாரண விஷயம்தான். ஆனால், ஒரு நகரில் வசிக்கும் அனைவரிடமும் சொந்தமாக விமானம் இருக்கிறது. இதைக்கேட்டால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் இது உண்மையான ஒரு செய்தி. இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
இந்த விமான நிலையம் (Airport) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இந்த நகரத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் விமானிகள் ஆவர். அப்படியிருக்க, அனைவரது வீட்டிலும் ஒரு விமானம் இருப்பது பொதுவான விஷயம்தான். விமானிகளைத் தவிர, இந்த நகரத்தில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரும் உள்ளனர். விமானிகள் மட்டுமல்லாமல், இவர்களும் தங்கள் வீடுகளில் விமானங்களை வைத்திருக்க விரும்புகிறார்கள். இவர்களுக்கு விமானங்கள் மீது எவ்வளவு காதல் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் அனைவரும் கூடி உள்ளூர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள்.
ஹவாயில் ஒரு விமானத்தை சொந்தமாக வைத்திருப்பது ஒரு காரை வைத்திருப்பதற்கு சமமாகும். காலனியின் தெருக்களிலும், மக்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள ஹேங்கர்களிலும் இங்கே விமானங்களைக் காணலாம். ஹேங்கர் என்பது விமானங்களை நிறுத்துவதற்கான இடமாகும். இந்த நகரத்தின் சாலைகளும் அகலமாக உள்ளன. இதனால் விமானிகள் அதை ஓடுபாதையாகப் பயன்படுத்தலாம்.
ALSO READ: BMW காரை “கைது” செய்த விவசாயி; சமூக ஊடகத்தில் வைரலாகிய போட்டோ
அமெரிக்காவின் (America) இந்த நகரத்தில் விமானங்களின் சிறகுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க, சாலை அடையாளங்கள் மற்றும் லெட்டர்பாக்ஸ்கள் இயல்பை விட குறைந்த உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த நகரத்தில், வீதிப் பெயர்களும் விமானங்கள் தொடர்புடையவையாக வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு சாலைக்கு போயிங் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, விமானங்களின் செயல்பாட்டிற்கு அமெரிக்கா ஒரு பெரிய ஊக்கத்தை அளித்தது. இதற்காக பல விமான நிலையங்கள் நாட்டில் கட்டப்பட்டன. 1939 ஆம் ஆண்டில் அங்குள்ள விமானிகளின் (Pilot) எண்ணிக்கை 34,000 ஆக இருந்தது, இது 1946 வாக்கில் 4,00,000 க்கும் அதிகமாக அதிகரித்தது. அமெரிக்க சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நாட்டில் குடியிருப்பு விமான நிலையங்களை நிர்மாணிக்க முன்மொழிந்தது. இது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கு இடமளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
ALSO READ: உலகின் மிகப் பெரிய டெலெஸ்கோப் FAST; சீனாவின் பிரம்மாண்டமான Sky Eye
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR