அமெரிக்க உச்ச நிதிமன்றத்தில் Google இடம் தோற்ற Oracle! காரணம் தெரியுமா?

ஆரக்கிள் உடனான நீண்டகால பதிப்புரிமைப் போரில் கூகுள் திங்களன்று ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையை உருவாக்க ஆரக்கிளின் மென்பொருள் குறியீட்டைப் பயன்படுத்துவது கூட்டாட்சி பதிப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்று கூறி அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 6, 2021, 11:10 PM IST
  • அமெரிக்க உச்ச நிதிமன்றத்தில் Google இடம் தோற்ற Oracle!
  • கீழ் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திக் கூகுளின் முறையீடு வெற்றி பெற்றது
  • தீர்ப்பு மாறி வந்திருந்தால் கூகுளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கும்
அமெரிக்க உச்ச நிதிமன்றத்தில் Google இடம் தோற்ற Oracle! காரணம் தெரியுமா? title=

ஆரக்கிள் உடனான நீண்டகால பதிப்புரிமைப் போரில் கூகுள் திங்களன்று ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையை உருவாக்க ஆரக்கிளின் மென்பொருள் குறியீட்டைப் பயன்படுத்துவது கூட்டாட்சி பதிப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்று கூறி அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
கூகுள் (Google) மென்பொருள் குறியீட்டைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்டத்தின் கீழ் நியாயமில்லை என்று கூறிய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்டஆரக்கிள் மற்றும் கூகுள்  இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆண்டுக்கு 175 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்டுள்ளன, 2010 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் தொடர்பாக ஆரக்கிள் வழக்குத் தொடர்ந்தது.  

Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!  

அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் (U.S. Court of Appeals) 2018 ஆம் ஆண்டில் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள ஃபெடரல் சர்க்யூட்டில் கூகுள் முறையிட்டது.

அந்த தீர்ப்பு கூகுளுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் நிலைமை உருவானது.  முதலில் ஆரக்கிள் 8 பில்லியன் டாலரை இழப்பீட்டுத் தொகையாக கேட்டாலும்,  புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் 20 பில்லியன் டாலர் முதல் 30 பில்லியன் டாலர் வரையிலான மிகப் பெரியத் தொகையை கூகுள் செலுத்த வேண்டியிருக்கும் என்ற நிலைமை உருவானது.  

கூகுள் தனது ஜாவா மென்பொருளின் 11,330 வரிக் கணினி குறியீட்டையும், அது ஒழுங்கமைக்கப்பட்ட முறையையும் நகலெடுத்து, ஆண்ட்ராய்டை உருவாக்கி பில்லியன் கணக்கான டாலர்கள் வருவாய் ஈட்டியதாக ஆரக்கிள் குற்றம் சாட்டியது.

Also Read | சூயஸ் கால்வாய் டிராஃபிக் ஜாமுக்கு காரணம் என ட்ரோலான கேப்டன்

அண்ட்ராய்டு, டெவலப்பர்கள் மில்லியன் கணக்கான பயன்பாடுகளை உருவாக்கியுள்ளனர், இப்போது உலகின் 70% க்கும் மேற்பட்ட மொபைல் சாதனங்கள் அதன் அடிப்படையிலேயே  இயங்குகின்றன.

தான் கணினி நிரலை நகலெடுக்கவில்லை, மாறாக கணினி நிரல் அல்லது தளத்தை இயக்க தேவையான ஜாவாவின் மென்பொருள் குறியீட்டின் கூறுகளைப் பயன்படுத்தியது என்று கூகுள் உறுதியாக சொன்னது. மேலும் கூட்டாட்சி பதிப்புரிமைச் சட்டம் வெறும் "செயல்பாட்டு முறைகளை" பாதுகாக்காது என்றும் வாதிட்டது.

தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் கூகுளுக்கு மிகப் பெரிய நிம்மதி கிடைத்திருக்கும்.

Also Read | பழைய மற்றும் அழித்த WhatsApp செய்திகளை மீண்டும் கொண்டுவர Tips and Tricks

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News