உளவாளிகளைக் கொல்வதற்காக புதிய சட்டத்தை முன்வைக்கும் United Kingdom
இங்கிலாந்து அரசு உருவாக்கி வரும் ஒரு புதிய சட்டமானது, பிரிட்டிஷ் உளவாளிகளைக் கொல்ல உரிமம் கொடுப்பதோடு, தேவைப்பட்டால், குற்றங்களைச் (crimes) செய்யவும் அனுமதி கொடுக்கும்.
ஜேம்ஸ் பாண்டிற்கு கொலை செய்வதற்கான உரிமம் உள்ளது, அதைப் பயன்படுத்த அவர் ஒருபோதும் வெட்கப்படவில்லை. வெறும் 24 திரைப்படங்களில், ஜேம்ஸ் பாண்ட் 007, 597 பேரைக் கொன்றிருக்கிறார். இது திரையலகக் கதை. நிதர்சனத்தில் பிரிட்டிஷ் ஏஜெண்டுகள் James Bond 007ம் அல்ல, அவர்களுக்கு யாரையும் கொல்வதற்கான உரிமமும் இல்லை.
MI-5 இன் முன்னாள் தலைவர் ஒருமுறை இவ்வாறு கூறினார், "படுகொலை என்பது அவரது மாட்சிமை பெற்ற அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதி இல்லை".
ஆனால் விரைவில் இதுவொரு வரலாறாக இருக்கலாம். இங்கிலாந்து அரசு உருவாக்கி வரும் ஒரு புதிய சட்டமானது, உளவாளிகளைக் கொல்ல உரிமம் கொடுப்பதோடு, தேவைப்பட்டால், குற்றங்களைச் (crimes) செய்யவும் அனுமதி கொடுக்கும்.
எதுபோன்ற குற்றங்கள்?
ரகசிய மனித புலனாய்வு ஆதார மசோதா (covert Human Intelligence Sources Bill) இதைப் பற்றி தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. ரஷ்யா, வட கொரியா, இரான் போன்ற நாடுகளைச் சேர்ந்த உளவாளிகள், சதிகாரர்கள் ஹேக்கர்களை கையாள்வதற்கான யோசனையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2019 ஆம் ஆண்டில், வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த பிரிட்டிஷ் நீதிமன்றம், உளவாளிகளை, MI5 கடமையின் அடிப்படையில் கொல்ல முடியும் என்று கூறியது. அது மட்டுமல்ல, மேலும் அவர்கள் கொலையை நியாயப்படுத்தத் தவறினால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படாது.
தற்போது முன்னெடுக்கப்படும் இந்த சட்டமானது, பிரிட்டிஷ் மண்ணில் உளவாளிகள் கொல்லப்படுவதற்கு அங்கீகாரம் அளிக்கக்கூடும் என்று மனித உரிமைகள் குழுக்கள் கருதுகின்றன.
ராணுவ புலனாய்வு, பிரிவு 5 என்பதன் சுருக்கமான MI5 (Military Intelligence, Section 5) என்பதன் சுருக்கம் ஆகும். ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு சேவையில் ஈடுபடும் MI5, நட்டின் புலனாய்வு இயந்திரங்களின் ஒரு பகுதியாகும்.
ஒற்றர்களால் கொல்லப்படும் விஷயமானது பெரிதாக பேசப்படாமல் மூடி மறைக்கப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் இந்த கொலைகளை நியாயப்படுத்தும் சட்டங்கள் இல்லை.
2018 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா தனது உளவாளிகளைக் கொல்ல உரிமம் கொடுத்தது. 9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, உளவாளிகளைக் கொல்ல சிஐஏவுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் சாலிஸ்பரியில், செர்ஜி (Sergei) மற்றும் யூலியா ஸ்ரீபால் (Yulia Sripal) ஆகியோர் ரஷ்ய உளவாளிகள் என்ற சந்தேகத்தில் நச்சுக் கொடுத்து கொலை செய்ய முயன்ற வழக்கும் நினைவிருக்கலாம்.
இஸ்ரேலின் மொசாட் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வேறு எந்த நாட்டின் முகவர்களையும் விட அதிகமான மக்களைக் கொன்றதாக (குறைந்தது 800 க்கும் மேற்பட்டவர்கள்) டெய்லி மெயில் பத்திரிகையின் அறிக்கை கூறுகிறது.
இந்த படுகொலையா அல்லது தற்காப்பு நடவடிக்கைகளா? அல்லது ஒற்றர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக மக்களைக் கொல்கிறார்களா?
கொலை செய்வதற்கான உரிமம் பெரும்பாலும் ஒரு கேள்வியுடன் நியாயப்படுத்தப்படுகிறது – அந்த தலையாய கேள்வி இதுதான்... “பாதுகாவலர்களை யார் பாதுகாப்பார்கள்?”
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR