புதுடெல்லி: அமெரிக்காவிற்கு முதல் முறையாக வருபவர்களுக்கான விசா நேர்காணல் காத்திருப்பு காலம் தற்போது 1000 நாட்கள் அதாவது 3 வருடங்களாக உள்ளது. B1 (வணிகம்) மற்றும் B2 (சுற்றுலா) ஆகிய பிரிவில் விசா விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காத்திருப்பு காலம் பெருமளவு அதிகரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை “சுற்றுலா விசாவுக்கான உலகளாவிய சராசரி காத்திருப்பு நேரம் ( B1/B2) நேர்காணலுக்கான காத்திருப்பு காலம். இந்த மாதத்தின்படி இரண்டு மாதங்களுக்குள் உள்ளது” என தெரிவித்துள்ள நிலையில், உண்மை நிலை வேறாக உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் முறையாக வருகையாளர் விசா விண்ணப்பதாரர்கள் அல்லது இந்தியாவில் டிராப் பாக்ஸ் விண்ணப்பத்திற்கு (நேர்காணல் தள்ளுபடி) தகுதி பெறாத பிறருக்கு காத்திருப்பு காலம் மூன்று வருடங்களாக உள்ளது. எனவே, முதல் முறையாக விண்ணப்பிக்கும் B1/B2 விசா விண்ணப்பதாரர் 2025ம் ஆண்டின் பிற்பகுதியில் தான் நேர்காணலுக்கான தேதியைப் பெறலாம் என்ற நிலை உள்ளது.


இந்தியாவில் காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. “நவம்பர் 2022 நிலவரப்படி, சுற்றுலா விசா (B1/B2) நேர்காணல் சந்திப்புக்கான உலகளாவிய சராசரிக் காத்திருப்பு நேரம் இரண்டு மாதங்களுக்குள் உள்ளது. நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு சில நாட்களுக்குள் அவசர அடிப்படையில், நேர்கானலுக்கான அபாயிண்ட்மெண்ட் கிடைக்கும். காத்திருப்பு நேரத்தை விரைவில் குறைக்க நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம், ”என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | NRI News: நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள் 


டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியாவில் விசா நடைமுறைகளை விரைவுபடுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை சமீபத்தில் விவரித்திருந்தார். அதிக அளவிலான விண்ணப்பதாரர்களுக்கு, நேர்காணல் நடவடிக்கையில் இருந்து விலக்கு அளித்த, டிராப் பாக்ஸ் கேஸ்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தீர்ப்பு வழங்குதல் மற்றும் தற்காலிக பணியாளர்களைப் பெறுதல் ஆகியவை இதில் அடங்கும்.


விசா விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட கோவிட்-க்கு முந்தைய நிலையிலான எண்ணிக்கையில் வர ஆரம்பித்து விட்டாலும், அதைச் செயல்படுத்த இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் போதுமான அளவு பணியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள மாணவர்கள், B1/B2, தொழில் திறம் பெற பணியாளர்கள் (H) போன்ற பிரிவுகளில் பெருமளவிலான விசா விண்ணப்பங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 


2023 நிதியாண்டில் தொற்று நோய்க்கு முந்தைய விசா செயலாக்க நிலைகளை எட்டுவோம் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தை ஆதரிக்கும் முக்கிய விசா வகைகளில், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை நாங்கள் கடந்து விட்டோம். 2016 ஆம் ஆண்டு முதல் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு 2022 நிதியாண்டில் அதிக மாணவர் விசாக்களை வழங்கியுள்ளோம் என அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.


மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ