அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதஙக்ளை உயர்த்தியதால், அந்நாட்டில் பொருளாதார மந்தநிலை அதிகரித்துவரும் அச்சங்கள் உண்மையாகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve System), தனது கொள்கை விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. புதன்கிழமையன்று உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதமானது 1.5% முதல் 1.75% வரை வட்டிகளை அதிகரித்தது.


1994 க்குப் பிறகு அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய இந்த வட்டி விகித உயர்வால், அந்நாடு சந்தித்து வரும் பணவீக்கத்திற்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.  


மேலும் படிக்க | தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தானியர்களே: அரசு அறிவுறுத்தல்


1994ஆம் ஆண்டுக்கு பிறகு பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் மிகப்பெரிய அதிகரிப்பானது, நுகர்வோர் செலவினங்கள் குறைந்திருப்பதை அடுத்து வந்துள்ளது. இது, அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகி வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.


பணவீக்கம் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், அதன் பாதிப்புகளை தவிர்க்கும் வண்ணம், அமெரிக்க மத்திய வங்கி அதை நிவர்த்தி செய்ய மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மூடிஸ் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது.


அமெரிக்க பொருளாதாரம் இப்போது இந்த ஆண்டு வளர்ச்சியின் 1.7% வளர்ச்சி விகிதத்திற்குக் கீழே குறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமல்ல, வேலையின்மை 3.7% ஆக உயர்ந்துள்ளதுடன், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது 2024 வரை 4.1% என்ற அளவில் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.


மேலும் படிக்க | பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மின்சார கட்டண உயர்வால் தத்தளிக்கும் பாகிஸ்தானிகள்


அமெரிக்காவின் பொருளாதாரம் முழுமையான மந்தநிலையை அடையும் என்று கணிக்காவிட்டாலும், பொருளாதார வளர்ச்சி கணிப்புகளின் வரம்பு 2023 இல் பூஜ்ஜியத்தை நோக்கி சென்றது என்பது ஆபத்தின் அறிகுறியாகும்.  


அமெரிககவின் பணவீக்கம் 40 வருடங்களில் மிகவும் அதிகமாக உள்ளது. புதன்கிழமை எடுக்கப்பட்ட மிகவும் தீவிரமான வட்டி விகித நடவடிக்கைகளுக்கு பிறகும் தனிப்பட்ட நுகர்வு செலவினங்களின் விலைக் குறியீட்டின் மூலம் பணவீக்கம் இந்த ஆண்டு வரை 5.2% ஆகவும், 2024 இல் படிப்படியாக 2.2% ஆகவும் இருக்கும் என்று கருதுகின்றனர். 


பணவீக்கத்தை முறியடிக்கும் வரை அமெரிக்க ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை இதே அளவில் வைத்தாலும், அது  பொருளாதாரத்தையும் உடைக்கும் அபாயம் உள்ளது" என்று Moody's Analytics நாணயக் கொள்கை ஆராய்ச்சியின் தலைவர் Ryan Sweet தெரிவித்துள்ளதையும் கணக்கில் எடுத்துக் கொள்வது முக்கியமாகிறது.


மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறதா; வெளியான பரபர தகவல்


 "வளர்ச்சி குறைகிறது மற்றும் நிதிச் சந்தை நிலைமைகளில் இறுக்கம் அதிகரிக்கிறது. பணவியல் கொள்கையை அகற்றுவதன் விளைவு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த காலம் எடுக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க சில்லறை விற்பனை மே மாதத்தில் மிகவும் குறைந்தது. இதனையடுத்து அட்லாண்டாவின் பெடரல் ரிசர்வ் வங்கி அதன் இரண்டாம் காலாண்டு வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 0% ஆகக் குறைத்தது. நுகர்வோர் செலவினங்களின் மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா ஏற்கனவே மந்தநிலையில் இருக்கலாம் என்றும் சில பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 


 ஏற்கனவே இலங்கை, திவாலானது. தற்போது பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சிப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளது சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க |  கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... கை விரித்த சீனா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR