வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இதனால் அங்கு போர் பதட்டம் உருவாகியுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட சீனா தயக்கம் காட்டி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே வடகொரியா அணுஆயுத மிரட்டலை அமெரிக்கா தனியாக சமாளிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கினார்.


வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை சமாளிக்கும் வகையில் காரல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை கொரிய தீபகற்ப பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.


அதற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மேலும் 2 போர்க் கப்பல்கள் சென்றுள்ளன. அவற்றில் அதிரடிப்படை வீரர்கள் சென்றுள்ளனர். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.