வாஷிங்டன்: அமெரிக்கா இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ளது என்ற உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார் ஒரு காங்கிரஸ் எம்.பி. வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கும் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Alex Mooney இந்த விஷயத்தை அம்பலமாக்கிவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனா மற்றும் ஜப்பான் பெரிய பொருளாதாரங்களாக இருந்தாலும் அவற்றுக்கு இந்த அளவு கடன் இல்லை. 2020 ஆம் ஆண்டில், அமெரிக்காவின்  தேசிய கடன் 23.4 டிரில்லியன் டாலராக இருந்தது, அதாவது ஒரு நபரின் மேல் நாட்டின் கடன் சுமை 72,309 அமெரிக்க டாலர் ஆகும்.


"நம் நாட்டின் கடன் 29 டிரில்லியன் டாலர்களாக உயரவிருக்கிராது. இது ஒரு குடிமகனுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கடன் எங்கு செல்கிறது என்பது குறித்து ஏராளமான தவறான தகவல்கள் உள்ளன. நாம் கடன்பட்டிருக்க வேண்டிய முதல் இரண்டு நாடுகள் சீனா மற்றும் ஜப்பான், அல்ல உண்மையில் நாம் அதிகம் கடன் வாங்கியிருப்பது நமது நட்பு நாடான இந்தியாவிடம் இருந்தே!" என்று அலெக்ஸ் மூனி (Alex Mooney) கூறினார்.


Also Read | India in UN: இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?


"நாம் எப்போதுமே சீனாவுடன் (China) உலகளாவிய போட்டியில் இருக்கிறோம், அவர்களுக்கு நாம் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக கடன்பட்டிருக்கிறோம், ஜப்பானுக்கு (Japan) 1 டிரில்லியன் டாலர் கடன்பட்டிருக்கிறோம்" என்று மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் நாடாளுமன்ற அவையில் கூறினார். 


ஜனவரி மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் 1.9 டிரில்லியன் டாலர் தொகையை கொரோனா வைரஸ் நிவாரண தொகுப்பாக அறிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க, சராசரி அமெரிக்கர்களுக்கு நேரடி நிதி உதவி, வணிகங்களுக்கு ஆதரவு மற்றும் தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு ஊக்கமளித்தல் உள்ளிட்டவற்றுக்காக அமெரிக்க அதிபர் 2 டிரில்லியன் நிதியை அறிவித்தார். இதற்கு, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


"அமெரிக்கர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய பணத்தை எங்களுக்கு உதவியாக கொடுக்கும் நபர்கள் அவசியமில்லை. பிரேசிலுக்கு (Brazil) நாம் 258 பில்லியன் டாலர் கடன்பட்டிருக்கிறோம். இந்தியாவுக்கு, 216 பில்லியன் டாலர் கடன்பட்டிருக்கிறோம்" என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதி மூனி கூறினார்.


Also Read | Yusuf Pathan: IPL முதல் தென்னாப்பிரிக்கா வரை Top 5 knocks 


2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தேசியக் கடன் 5.6 டிரில்லியன் டாலராக இருந்தது. ஒபாமா நிர்வாகத்தின் போது அது இரட்டிப்பாகியது.


"ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த எட்டு ஆண்டுகளில் நமது தேசியக் கடன் இரட்டிப்பானது. அத்துடன், அமெரிக்காவின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து முற்றிலும் கட்டுப்படுத்தப்படாத மற்றொரு அளவுக்கு செல்லத் தொடங்கியது" என்று அவர் கூறினார், "எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என எனது சகாக்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். 


Also Read | Top Selling Cars: மாருதியின் புதிய அம்சங்கள் கொண்ட கார் 


அரசாங்கத்திடம் பணம் இல்லை, இந்த நிலையில் அமெரிக்க அரசு கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் அறிவிக்கும் நிதித் தொகுப்பில் பெரும்பாலானவை எப்படியும் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு செல்லப்போவதில்லை" என்று அலெக்ஸ் மூனி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


2050 க்குள் கூடுதலாக 104 டிரில்லியன் டாலர் கடன் அதிகரித்துவிடும் சேர்க்கப்படும் என்று காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிடுகிறது.  


"நாம், உண்மையில் ஆண்டொன்றுக்கு ஒருவருக்கு 10,000 அமெரிக்க டாலர் கடன் வாங்கியுள்ளோம், அதாவது, நமது கடன் சுமை கட்டுப்பாட்டில் இல்லை" என்று அமெரிக்க எதிர்கட்சி அந்நாட்டின் கடன் சுமையை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டது.


Also Read | சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் இழப்பீடு   


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR