வன்முறை சம்பவங்கள் என்னை ஆத்திரமடைய செய்துள்ளன: Donald Trump
அமெரிக்காவின் கேபிடோல் கட்டிடத்தில் நடந்த வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார். அதிபர் பதவியில் இருந்து விலகவும் ஒப்புக் கொண்டார்.
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிக்கை வெளிவந்துள்ளது, இந்த சம்பவத்தை அவர் கடுமையாக கண்டித்தார். வன்முறையின் மூலம் ஜனநாயகத்தை களங்கப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வீடியோ செய்தி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) , 'எல்லா அமெரிக்கர்களையும் போலவே நானும் வன்முறை, அராஜகம் மற்றும் கலவரம் ஆகியவற்றை கண்டு கோபப்படுகிறேன். கட்டிடத்தை பாதுகாப்பதற்கும் ஊடுருவியவர்களை வெளியேற்றுவதற்கும் நான் உடனடியாக காவல் துறைக்கு உத்தரவிட்டேன். அமெரிக்கா எப்போதும் சட்டம் ஒழுங்கில் சிறந்த நாடாக இருக்க வேண்டும்’ என தனது வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேற தயாரானார்
இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலக ஒப்புக் கொண்டார். அவர், 'இப்போது நாடாளுமன்றம் தேர்தல் முடிவுகளுக்கு சான்றளித்துள்ளது. புதிய நிர்வாகம் ஜனவரி 20 அன்று பதவி ஏற்கும். இப்போது ஒரு மென்மையான, ஒழுங்கான மற்றும் மென்மையான அதிகார மாற்றம் ஏற்படுவதற்கான நடவடிக்கைக்கள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
வன்முறையால் ஜனநாயகம் களங்கம் பிறப்பித்துள்ளார்கள் : ட்ரம்ப்
டொனால்ட் டிரம்ப் தனது உரையில், 'இந்த வன்முறை சம்பவம் என்னை கோபப்படுத்தியுள்ளது. வன்முறையை மேர்ட்கொண்டு ஜனநாயகத்திற்கு களங்கம் பிறப்பித்துள்ளார்கள். அவர் கூறினார், 'அமெரிக்கா மிகவும் போட்டி மிகுந்த தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன்’ என்றார்.
ALSO READ | Elon Musk உலகின் பணக்காரர் ஆனது எப்படி தெரியுமா?
டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று பிடனின் வெற்றியை உறூதிபடுத்த வியாழக்கிழமை கூடியது. அந்த நேரத்தில், டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே கூடினர். சிலர் கேபிடோல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில், ஒரு பெண் உட்பட 4 பேர் இறந்தனர்.
நவம்பர் 3 ம் தேதி நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில், டிரம்ப் தனது தோல்வியை ஏற்கவில்லை, தேர்தல் விரிவாக மோசடி செய்யப்பட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டினார். பல மாநிலங்களில் டிரம்ப் ஆதரவாளர்களால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
ஜோ பிடன் ஜனவரி 20 அன்று பதவியேற்பார்
வன்முறைக்குப் பின்னர், அமெரிக்க நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஜோ பிடனின் (Joe Biden) வெற்றியை உறுதிபடுத்தி அதிகாரபூர்வமாக அறிவித்தது, ஜனவரி 20 ஆம் தேதி, அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார். நாடாளுமன்றம், ஜோ பிடனை அதிபராகவும், கமலா ஹாரிஸை துணைத் தலைவராகவும் நாடாளுமன்றம் அறிவித்தது.
ALSO READ | உனக்கு எப்போதும் தடா என டிரம்பை காலவரையின்றி தடை செய்தது Facebook
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR