உனக்கு எப்போதும் தடா என டிரம்பை காலவரையின்றி தடை செய்தது Facebook

டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்டிக்கும் விதத்தில் பேஸ்புக்  தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் தளத்தை பயன்படுத்த காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2021, 11:10 PM IST
  • அமெரிக்க வரலாற்றில் களங்கம் ஏற்பத்திய நாள் 2021 ஜனவரி 6
  • தனது ஆதரவாளர்களின் கலவரத்தை கண்டிக்காமல் சிறந்தவர்கள் என்று சொன்னார் அமெரிக்க அதிபர்
  • அமைதியாக அதிகார மாற்றத்தை நடத்த டிரம்ப் விடமாட்டார் என உலகம் முழுவதும் அதிருப்தி
உனக்கு எப்போதும் தடா என டிரம்பை காலவரையின்றி தடை செய்தது Facebook   title=

டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்டிக்கும் விதத்தில் பேஸ்புக்  தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் தளத்தை பயன்படுத்த காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் பதவி காலத்தில் சமூக ஊடகத்தில் (Social Media) அடிக்கடி சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்துக் கொள்வதற்காக கண்காணிபில் இருந்தார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அமெரிக்க வரலாற்றில் புதன்கிழமையன்று நடைபெற்ற சம்பவம் உலகையே அதிரச் செய்தது.

ஜனவரி 6ஆம் தேதி டொனால்ட் டிரம்பின் (Donald Trump) ஆதரவாளர்கள் அமெரிக்க கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைந்தபோது, அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கூட விமர்சகர்களாக மாறினார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.

Also Read | Washington DC-யில் அடுத்த 15 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்

இதுபோன்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில், அமெரிக்க அதிபரின் சமூக ஊடகப் பதிவுகள் பரவலாக கண்டனத்தை பெற்றன. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் (Facebook) ஒரு இடுகையை எழுதி தனது முடிவை பகிரங்கப்படுத்தினார்.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் இடுகையின் முழு உரை இங்கே:

"கடந்த 24 மணிநேர அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் மீதமுள்ள நேரத்தை சரியாக பயன்படுத்துவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு (Joe Biden) அமைதியான மற்றும் சட்டபூர்வமான அதிகார மாற்றத்தை வழங்குவதில் தவறான அணுகுமுறையை மேற்கொள்கிறார் என்பதை அவரது செயல்பாடுகள் தெளிவாக நிரூபிக்கின்றன.

கேபிடல் கட்டிடத்தில் தனது ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக தூண்டிவிடுவதைப் போல இருந்த பதிவுகள் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எனவே அதுபோன்ற அறிக்கைகளை நாங்கள் நேற்று அகற்றினோம். அந்த பதிவுகளும், அவரது நோக்கமும் மேலும் வன்முறையைத் தூண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.

Facebook

தேர்தல் முடிவுகளின் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீதமுள்ள 13 நாட்களும் பதவியேற்பு நாட்களும் அமைதியாகவும், நிறுவப்பட்ட ஜனநாயக விதிமுறைகளுக்கு ஏற்பவும் கடந்து செல்வதை உறுதி செய்வதே முழு நாட்டிற்கும் அவசியமானது ஆகும்.

கடந்த பல ஆண்டுகளாக, அதிபர் ட்ரம்ப்பை எங்கள் தனிப்பட்ட விதிகளுக்கு இணங்க எங்கள் தளத்தை பயன்படுத்த அனுமதித்தோம், சில நேரங்களில் உள்ளடக்கத்தை அகற்றி இருக்கிறோம். சில சமயங்களில் எங்கள் கொள்கைகளை மீறும் போது அவரது இடுகைகளுக்கு ’label’ செய்திருக்கிறோம்.

நாங்கள் இதைச் செய்ததற்கு காரணம்,   அரசியல் பேச்சு, சர்ச்சைக்குரிய பேச்சாக இருந்தாலும் அவற்றை அணுக பொது மக்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் தற்போதைய சூழல் அடிப்படையிலேயே மாறுபட்டிருக்கிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.  

Also Read | Pfizer தடுப்பூசி போட்டுக்கொண்ட மெக்ஸிகோ மருத்துவருக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்

இந்த காலகட்டத்தில் அதிபரை தொடர்ந்து எங்கள் சேவையைப் பயன்படுத்த அனுமதித்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் மிகப் அதிகமாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.

எனவே, அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் காலவரையின்றி முடக்குகிறோம். அல்லது அதிகாரம் மாற்றம் அமைதியாகநிறைவடையும் வரை குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது இந்தத் தடை தொடரும்" என்று பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார் மார்க்.

கேபிடல் ஹில் (Capitol Hill) வன்முறையின் முதல் ஒரு மணி நேரத்தில், டிரம்ப் தனது சமூக ஊடக கணக்கில் எந்தவித பதிவுகளையும் போடவில்லை. பிறகு அமைதி காக்குமாறு அடுத்தடுத்து இரண்டு ட்வீட்களை மட்டுமே வெளியிட்டார்.

Also Read | முதன் முறையாக தவறை ஒப்புக்கொண்ட Kim Jong Un: North Korea-வில் மாறுகிறதா சூழல்?

ஜோ பிடனின் நேரடி உரைக்குப் பிறகுதான் டிரம்ப் தனது பதிவுசெய்த வீடியோவை ட்வீட் செய்தார், அதில் அவர் எதிர்ப்பாளர்களை "வீட்டிற்குச் செல்ல" கேட்டுக் கொண்டார், ஆனால் அவர் எதிர்ப்பாளர்களை நேசிப்பதாகவும் அவர்கள் 'சிறந்தவர்கள்' என்றும் கூறியிருந்தார். அந்த வீடியோவை ட்விட்டர் நீக்கிவிட்டது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News