அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்வதற்காக, பிற நாட்டினருக்கு  வழங்கப்படும் விசா தான் ஹெச்-1 பி (H-1B)  விசா. இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், இதனால் அதிகளவில் பயன் பெற்று வருகின்றனர்.
   
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (Donald Trump) இப்போது, அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து  உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய பாதிப்பில் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். 


இந்த நிலையை கருத்தில் கொண்டு அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.


வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் H-1B உட்பட வேலைக்காக வழங்கப்படும் விசாக்களுக்கு ,கடந்த ஏப்ரல் 22-ந்தேதி தடை விதித்து, ட்ரம்ப் நிர்வாகம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.


இதை தொடர்ந்து ஜூன் 22-ந்தேதி மேலும் சில விசா கட்டுப்பாடுகளை விதித்தார் அதிபர் ட்ரம்ப். நவம்பரில்வேலை இழந்தவர்களின் சதவிகிதம் 6.7 சதவிகிதமாக அதிகரித்ததை அடுத்து விசா மீதான தடையை 2020 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


இந்த நிலையில் ஹெச் 1-பி (H1-B)விசா மீதான தடையை மார்ச் 31-ந் தேதி வரை மேலும் நீட்டித்து டிரம்ப் தற்போது உத்தரவிட்டுள்ளார்.


அமெரிக்காவில் (America) H1-B விசாவில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகிறார்கள். தற்போதைய இந்த தடையால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, H-1B  விசாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டு பணியாளர்கள் பலர் வேலைகளை இழந்தனர். அப்படி வேலை இழந்த வெளிநாட்டை சேர்ந்த பணியாளர், 60 நாட்களுக்குள் புதிய வேலையில் சேரவில்லை என்றால், சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என அங்குள்ள சட்டம் கூறுகிறது


விசா மீதான தடை குறித்து டிரம்ப் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட வேலை இழப்புகள் மற்றும் பொருளாதார காரணங்களுக்காகத்தான் விசா தடை விதிக்கப்பட்டது. நிலைமையில் முன்னேற்ற்றம் இல்லாததால் தடை நீட்டிக்கப்படுகிறது” என்றார்.


ALSO READ | புரியாத புதிர்: உலகில் அங்கே இங்கே என தோன்றிய உலோக மர்ம தூண் இப்போது இந்தியாவிலும்..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR