அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு பேசினார். இதனை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி படுத்தின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான நேற்று இரவு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.


இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:- 


இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணியளவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியதாக நேற்று இரவு வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.