ISIS தலைவன் அமெரிக்க படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டார்: படைகளுக்கு பெரிய வெற்றி
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த பகுதியில் அமெரிக்க சிறப்புப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கையில் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ்: சிரியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், சிரியாவின் அத்மாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பாக்தாதியின் பணிகளை இவர் கவனித்து வந்தார்
இந்த அமெரிக்க படை (American Forces) தாக்குதலில் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி இலக்கு வைக்கப்பட்டார். 31 அக்டோபர் 2019 அன்று அதே பகுதியில் அமெரிக்க தாக்குதலில் அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்ட பிறகு அவர் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார். அமெரிக்க துருப்புக்கள் பாக்தாதியின் இடத்தில் நுழைந்தபோது, பாக்தாதி தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் அழித்துக்கொண்டது போலவே அல்-குரேஷியும் செய்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர்
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த பகுதியில் அமெரிக்க சிறப்புப் படைகள் இறங்கி ஒரு வீட்டைத் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கிளர்ச்சியாளர்களுடன் 2 மணி நேரம் படைகள் மோதின. துருக்கிய எல்லையில் உள்ள அத்மா நகரில் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுகள் அதிர்ந்தன. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 13 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ALSO READ | மீண்டும் உச்சம் தொடும் கோவிட் தொற்று: தென் கொரியாவில் திடீர் ஏற்றம்
தாக்குதலுக்கு உத்தரவிட்டேன்: ஜோ பைடன்
அமெரிக்க மக்களையும், நாட்டின் கூட்டாளிகளையும் பாதுகாக்கவும், உலகத்தை பாதுகாப்பான இடமாக மாற்றவும் இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 'நமது ஆயுதப் படைகளின் திறமைக்கும் துணிச்சலுக்கும் வணக்கம் செலுத்துகிறேன்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரைஷியின் போர்க்களத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர்கள் அனைவரும் பத்திரமாகத் திரும்பியுள்ளனர்' என்றார்.
இந்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் லைவாக பார்த்தார்
24 அமெரிக்க கமாண்டோக்கள் வடக்கு சிரியாவில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்று சேர்ந்தனர். இந்த நடவடிக்கையில் ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த முழு நடவடிக்கையையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden https://zeenews.india.com/tamil/world/no-apologies-for-what-i-did-us-president-joe-biden-on-afghanistan-exit-380067) மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரலையில் பார்த்தனர்.
2019 இல் இதேபோன்ற நடவடிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | IMMIGRATION LOANS: வெளிநாட்டில் செட்டில் ஆக வட்டியில்லா கடன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR