அமெரிக்க பெடரல் நீதிபதியான முதல் இஸ்லாமிய பெண் நுஸ்ரத் ஜஹான் சவுத்ரி யார்?
Federal Judge Of America Muslim Lady: அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் (ACLU) முன்னாள் வழக்கறிஞர் நுஸ்ரத் ஜஹான் சௌத்ரியை அமெரிக்க பெடரல் நீதிபதியாக அமெரிக்க செனட் நியமித்தது
அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் (ACLU) முன்னாள் வழக்கறிஞர் நுஸ்ரத் ஜஹான் சௌத்ரியை அமெரிக்க பெடரல் நீதிபதியாக அமெரிக்க செனட் நியமித்தது. நுஸ்ரத் ஜஹான் செளத்ரி, இந்த வாழ்நாள் பதவியை வகிக்கும் முதல் வங்காளதேச அமெரிக்கர் ஆவார். 46 வயதான நுஸ்ரத் ஜஹான் செளத்ரி, நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தின் UFS நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றுவார். 50-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் நுஸ்ரத் ஜஹான், கூட்டாட்சி நீதிபதியாக அமெரிக்க செனட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
அமெரிக்க மாவட்ட நீதிபதி நுஸ்ரத் ஜஹான் சௌத்ரி
ஜனவரி 19, 2022 அன்று, நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பணியாற்றுவதற்காக நுஸ்ரத் ஜஹான் சவுத்ரியை, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரைத்தார். வியாழக்கிழமை, செனட் அவரது நியமனத்தை உறுதிப்படுத்தியது.
பழமைவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ மன்சின், நுஸ்ரத் ஜஹான் சௌத்ரிக்கு எதிராக வாக்களித்தார். சௌத்ரியின் சில கடந்தகால கருத்துக்கள், சட்ட அமலாக்கத்திற்கு எதிராக அவரை ஒரு சார்புடையதாக மாற்றியதாக அவர் நம்புகிறார். "சீருடை அணிந்திருக்கும் எங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தீவிர ஆதரவாளராக, திருமதி சௌத்ரியின் நியமனத்தை நான் எதிர்த்தேன்" என்று மன்சின் கூறினார்.
முன்னதாக, பிடென் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு கூட்டாட்சி நீதிபதிகளான டேல் ஹோ மற்றும் நான்சி அபுடு ஆகியோரின் நியமனத்தையும் மச்சின் எதிர்த்தார். இருப்பினும், செனட் அவரது ஆதரவின்றி அவற்றை உறுதிப்படுத்தியது.
முதல் பெண் முஸ்லிம் கூட்டாட்சி நீதிபதி நுஸ்ரத் ஜஹான்
முதல் பெண் முஸ்லிம் கூட்டாட்சி நீதிபதி நுஸ்ரத் ஜஹான் சவுத்ரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை...
நுஸ்ரத் ஜஹான் சௌத்ரியின் தொழில் வாழ்க்கை
நுஸ்ரத் ஜஹான் சௌத்ரி ACLU இன் இன நீதித் திட்டத்தின் துணை இயக்குநராக இருந்தார். ஏழை மக்களுக்கு எதிரான இனரீதியான விவரக்குறிப்பு மற்றும் பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுவதில் அவர் ஒரு சாதனை படைத்துள்ளார். ACLU இன் இணையதளத்தின்படி, "நுஸ்ரத், அமெரிக்க அரசாங்கத்தின் விமானப் பயணத் தடைப் பட்டியல் நடைமுறைகள் தொடர்பான ஃபெடரல் நீதிமன்றத் தீர்ப்பைப் பாதுகாக்க உதவினார் நுஸ்ரத் ஜஹான் சௌத்ரி.
இன மற்றும் மத மேப்பிங் திட்டம்
நியூயார்க் காவல் துறையின் பாரபட்சமான முஸ்லீம்களின் விவரக்குறிப்பை கண்காணிப்பதற்கு அவர் சவால் விடுத்தார். அவரது முயற்சிகள் நீதிமன்ற உத்தரவின்படி தீர்வு ஒப்பந்தம் மற்றும் இன மற்றும் மத மேப்பிங் திட்டத்தைப் பற்றிய பொதுப் பதிவுகளைப் பாதுகாத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி இலக்கா மாற்றம்... அரசுக்கு மீண்டும் கொடைச்சல் கொடுக்கிறாரா ஆளுநர்?
மருத்துவரின் மகள்
நுஸ்ரத்தின் தந்தை சிகாகோவில் 40 வருடங்கள் மருத்துவராகப் பணிபுரிந்தார். அவர் 2016 இல் விஷுவல் எஃபெக்ட்ஸ் தயாரிப்பாளரான மைக்கேல் எர்லியை மணந்தார்.
நுஸ்ரத் ஜஹான் சௌத்ரி 1998 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டபப்ட்டிப்பை முடித்து பட்டதாரி ஆனார். அவர் 2006 இல் பிரின்ஸ்டன் பொது மற்றும் சர்வதேச விவகாரப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் 2006 இல் யேல் சட்டப் பள்ளியில் ஜூரிஸ் டாக்டரேட் படிப்பை முடித்தார்.
"சிகாகோ பகுதியில் ஒரு இளம் முஸ்லீம் பெண்ணாக, வாழ்க்கையின் யதார்த்தத்தை பார்த்து வளர்ந்தேன். போலீசாரின் கண்காணிப்புகள் அதிகம் இருந்தன. முஸ்லீம் என்பதாலேயே குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையங்களில் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். என்னைச் சுற்றி நான் பார்த்தது, வியத்தகு குடியிருப்புப் பிரிவினை மற்றும் சிகாகோ நகரத்தில் உள்ள வெள்ளையர்களைக் காட்டிலும் வேறு நிறத்தில் இருக்கும் மக்களுக்கு வெவ்வேறு வாய்ப்புகள் கிடைப்பது தொடர்பான ஆச்சரியங்களை பார்த்துள்ளேன்" என்று நுஸ்ரத் ஜஹான் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பணியாற்றுவதற்காக நுஸ்ரத் ஜஹான் சவுத்ரியை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரைத்தார்.
மேலும் படிக்க | பீகார் அமைச்சரானார் ரிக்ஷா தொழிலாளி! 2024 பொதுத்தேர்தலும் அரசியல் காய் நகர்வுகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ