அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை; அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்றம் அதன் 50 ஆண்டுகால தீர்ப்பை மாற்றி, வழங்கிய புதிய தீர்ப்பின் காரணமாக, அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை முடிவுக்கு வந்தது.
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை வழங்கும் போது, உச்ச நீதிமன்றம், தனது 50 அண்டு கால பழைய தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
ஐந்து தசாப்தங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தி, விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யும் உரிமை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய வழக்கில், கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்றம் Roe Vs Wade வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளது. எனினும், கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் தனித்தனி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.
கருக்கலைப்பு உரிமை அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. கருக்கலைப்பு உரிமை அமெரிக்காவின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினைதான் அமெரிக்க அடிப்படைவாதிகளுக்கும் தாராளவாதிகளுக்கும் இடையே ஆன பிளவை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா
Roe Vs Wade வழக்கு
1973 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு குறித்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது. இது Roe Vs Wade வழக்கு. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசிக்கும் நார்மா மெக்கோர்வி என்ற சிறுமிக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. 16 வயதில் முதல் முறையாக தாயானார். அப்போது அவள் குழந்தையை வளர்க்கும் நிலையில் இல்லை. அவர் தனது குழந்தையை தனது தாயின் பாதுகாப்பில் விட்டுவிட்டார். இருபது வயதில் இரண்டாவது முறையாக தாயானார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக அவள் கர்ப்பமான போது, அவள் கருக்கலைப்பு செய்ய விரும்பினாள். அந்த நேரத்தில், டெக்சாஸில் கருக்கலைப்பு, என்பது, அதனால் கர்ப்பிணி பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்நிலையில், அந்த பெண் பெடரல் நீதிமன்றத்தை அணுகினார், ஆனால் அங்கு கருக்கலைப்புக்கு அனுமதி பெற முடியவில்லை. இதையடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. இங்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 7:2 என்ற அளவில் வழங்கிய தீர்ப்பில், கருக்கலைப்பு தடைச் சட்டம் பெண்ணுக்கு எதிரானது எனக் கூறி, அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியதுடன், கர்ப்பத்தை என்ன செய்ய வேண்டும் என்ற உரிமை பெண்ணுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியது. இந்த தீர்ப்பு, கருக்கலைப்பு 28 வார வரையிலான கர்ப்பத்திற்கு அனுமதிக்கப்பட்டது, பின்னர் அது இருபது வாரங்களாக மாற்றப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்ததையடுத்து, அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறிய கருத்து
இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது அல்ல என்றார். இருப்பினும், மக்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையில் ஈடுபட வேண்டாம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிப்பதாக விவரித்த பிடன், நாடு முழுவதும் உள்ள பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை தற்போது ஆபத்தில் இருப்பதாகவும் கூறினார். அமெரிக்க மக்களின் அரசியலமைப்பு உரிமையை திடீரென நீதிமன்றம் பறித்துள்ளது எனவும் கூறினார்.
மேலும் படிக்க | Sunspot AR30398: பூமியை மிக மோசமாக தாக்கும் சூரிய எரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR