உலகெங்கிலும் ஒமிக்ரான் பரவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் நாடுகளில் ஒமிக்ரான் பரவல் மிக அதிகமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் கொரோனா வைரஸ் (Corona Virus) தடுப்பூசி போட்டுக் கொள்வாதும் வாராந்திர சோதனைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஜோ பிடன் நிர்வாகம் கட்டளையிட்டது.


அமெரிக்க அரசாங்கத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், பெரிய வணிகங்களுக்கான அதிபர் ஜோ பிடனின் கட்டாய தடுப்பூசி ஆணையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. அதிபர் ஜோ பிடனின் (Joe Biden) தடுப்பூசி வழிகாட்டுதலுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடன்படவில்லை. இருப்பினும், அமெரிக்க அரசாங்க நிதியைப் பெறும் நிறுவனங்களில், அமெரிக்க அரசின் சுகாதாரப் பணியாளர்களுக்கான தடுப்பூசி ஆணையை செயல்படுத்த நீதிபதிகள் அனுமதித்தனர்.


ALSO READ | இது என்ன கொடுமை!! உலோகப் பெட்டிகளில் தங்கவைக்கப்படும் சீன மக்கள்: வைரல் வீடியோ


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்ட அமெரிக்க  அதிபர் ஜோ பைடன், "பெரிய வணிகங்களில் உள்ள ஊழியர்களின் உயிர்காக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை உச்சநீதிமன்றம் தடை செய்திருப்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது" என்றார். கொரோனா வைரஸுக்கு எதிராக, குறிப்பாக ஒமிக்ரான் (Omicron) பரவலை எதிர்த்து நாடு தொடர்ந்து போராடி வருவதால்,  வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் "சரியான" வழியை தேர்வு செய்யுமாறு பிடென் வலியுறுத்தினார்.


அமெரிக்கவில் 63 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் மற்றும் 847,660 க்கும் அதிகமான இறப்புகளுடன் வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!


அமெரிக்காவில் ஓமிக்ரான் அலையை எதிர்த்துப் போராடும் வகையில், ஆறு அமெரிக்க மாநிலங்களில், கூடுதல் இராணுவ சுகாதாரப் பணியாளர்களை தனது நிர்வாகம் பணியில் ஈடுபடுத்தும் என்று அமெரிக்க அதிபர் பிடன் அறிவித்தார்.


இராணுவ சுகாதாரப் பணியாளர்கள் ரோட் தீவு, ஓஹியோ, நியூயார்க், நியூ மெக்சிகோ, நியூ ஜெர்சி மற்றும் மிச்சிகன் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்படுவார்கள், அவை கடந்த மாதத்தில் இருந்து வைரஸ் தொற்று காரணமாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


இந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் முன்பு எப்போது இல்லாத அளவை எட்டிய நிலையில்,  பல அமெரிக்க மாநிலங்கள் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்க நிதியுதவியை உறுதிப்படுத்த அவசரநிலையை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான நோயாளிகள் வருகையினால், பல மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன.


ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR