இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) துணை அதிபர் என்பதோடு,  அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், கருப்பினத்தை சேர்ந்த முதல் துணை அதிபர் என்ற பெருமையையும் பெற்றவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் (Kamala Harris), தேர்தலில் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றார்.


துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை கொலை செய்வதாக மிரட்டியதாக அமெரிக்க மாகாணமான  புளோரிடாவில், 39 வயது செவிலியர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


அமெரிக்க உளவுத் துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் (Niviane Petit Phelps )  என்பவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


ALSO READ | வெள்ளை மாளிகை வேந்தன் ஆனார் ஜோ பிடன்.. துணை அதிபர் கமலா ஹாரிஸ்... ஒரு பார்வை..!!!


பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 18 வரை அமெரிக்காவின் துணை அதிபரை கொலைசெய்வதாக பெல்ப்ஸ் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்தார் என்று புளோரிடாவின் அமெரிக்க (America) தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறையில் உள்ள தனது கணவருக்கு பெல்ப்ஸ் வீடியோக்களை அனுப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் மீது வெறுப்பை உமிழும் வகையில் அவர் பேசுவதைக் காணலாம்.


ஆனால், கைது செய்யப்பட்ட பெல்ப்ஸ் இது பற்றி கூறுகையில், அவர் துணை அதிபராக பதிவியேற்றுக் கொண்ட போது தான் அவர் மீது கோபம் கொண்டதாகவும், இப்போது அவர் மீது கோபம் எதுவும் இல்லை எனவும் கூறினார்.


கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி. கோபாலன் முன்னாள் இராஜீய துறை அதிகாரி மற்றும் தமிழ்நாட்டின் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாய்வழி பாட்டி ராஜம் அருகிலுள்ள பங்கநாடு கிராமத்தைச் சேர்ந்தவர். கமலாவின் மூதாதையர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் கிராமத்தை விட்டு வெளியேறிய போதிலும், குடும்ப உறுப்பினர்கள் துளசேந்திரபுரத்தில் உள்ள கோயிலுடன் இன்றும் தொடர்பு வைத்துக் கொண்டு தங்கள் உறவைப் பேணி வருகின்றனர்.


ALSO READ | சித்தி கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் தமிழக கிராமம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR