அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் இந்திய பயணம்; ராஜ்நாத் சிங் உடன் சந்திப்பு

அமெரிக்கா-இந்தியா இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், இந்திய-பிசிபிக் பிராந்தியத்தில் உள்ள சாவலான சூழ்நிலை, பயங்கரவாத குறித்த சவால்கள் ஆகியவை ஆலோசிக்கப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 20, 2021, 05:41 PM IST
  • அமெரிக்கா-இந்தியா இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை.
  • இந்திய-பிசிபிக் பிராந்தியத்தில் உள்ள சாவலான சூழ்நிலை, பயங்கரவாத குறித்த சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகை.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் இந்திய பயணம்; ராஜ்நாத் சிங் உடன் சந்திப்பு title=

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) 3 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று புது தில்லி வந்தடைந்த அவரை இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். 

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டின், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை (Rajnath Singh) இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அமெரிக்கா-இந்தியா இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், இந்திய-பிசிபிக் பிராந்தியத்தில் உள்ள சாவலான சூழ்நிலை, பயங்கரவாத குறித்த சவால்கள் ஆகியவை ஆலோசிக்கப்பட்டன.

இன்றைய பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக, இரு பாதுகாப்பு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

முன்னதாக, சனிக்கிழமை காலை, ஆஸ்டின் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்கு சென்று இந்தியாவிற்காக உயிர் தியாகம் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பேச்சுவார்த்தைக்கு முன்னர், அவருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ALSO READ | Air Force One விமானத்தில் ஏறுகையில், மூன்று முறை இடறி விழுந்தார் Joe Biden

வெள்ளிக்கிழமை அன்று, தில்லிக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தோடு,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும்  ( )பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் மோடியுடனான (PM Narendra Modi) தனது சந்திப்பில் ஆஸ்டின், இந்தோ-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை சமாளிக்கும் வகையில் இந்தியாவுடனான மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்த பிடென் நிர்வாகம் மிகவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் (Joe Biden) பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ALSO READ | அன்னை சீதா சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் கல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News