உலகில் ஆங்காங்கே பல மர்மங்கள் சிதறிக்கிடக்கின்றன. அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பகுதி தான் பெர்முடா முக்கோணம், அதாவது Bermuda Triangle. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் உள்ள புளோரிடா, பெர்முடா, புவர்டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் பெர்முடா முக்கோணம் அதாவது Bermuda Triangle என கூறுகிறார்கள். சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல ஆண்டு காலங்களாக விலகாமலேயே உள்ளது.


இதை சிலர் பாதாள உலகிற்கான கதவு என்கிறார்கள், இதை சிலர் இயல்பிற்கு மாறான மர்மமான பகுதி என்கிறார்கள். இது தொடர்பாக பல பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | Bermuda Triangle: விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் பெர்முடா முக்கோணம்..!!


இப்பகுதிக்கும் வரும் கப்பல் மட்டுமல்ல, இந்த பகுதியின் மேலே பறக்கும் விமானங்கள் கூட காணாமல் போகின்றன என்றால் ஆச்சர்யமும் பீதியும் தோன்றுகிறது அல்லவா...


15ம் நூற்றாண்டு முதல் தொடரும் இந்த மர்ம கதையில், இது வரை சுமார் 100க்கும் மேற்பட்ட கப்பல்கள், சுமார் 75 விமானங்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், சுற்றுலாவாசிகளை கவருவதற்காக சொகுசு கப்பல் நிறுவனம் ஒன்று புதிய யுக்தியை கையாண்டுள்ளது. ஏன்சியன்ட் மிஸ்டீரிஸ் குரூஸ் என்ற கப்பல் நிறுவனம் ஒன்று பயணிகளுக்கு பகீர் ஆஃபர் ஒன்றை அறிவித்து உள்ளது. அதில், பெர்முடா முக்கோண பகுதிக்கு செல்லும்போது மறைந்து போனால், முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என சொகுசு கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆனால், அதனை யாருக்கு தருவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆளே இல்லை என்றால், பணம் கொடுப்பதால் என்ன பயன் என நெட்டிசன்கள் கேஎள்வி எழுப்பியுள்ளனர். 


அடுத்த ஆண்டு மார்ச்சில், தொடங்கவுள்ள இந்த சுற்றுலா பயணத்தில், நியூயார்க் நகரில் இருந்து தொடங்கி பெர்முடா நோக்கி செல்லும் இந்த கப்பலில் பயணிகள் ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு 1,450 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும் என ஒரு விசித்திரமான வாக்குறுதியை அளித்துள்ளது.


Ancient Mysteries Cruise என்ற நிறுவனம் தனது விளம்பரத்தில், 'இந்த பெர்முடா முக்கோண சுற்றுப்பயணத்தில் நீங்கள் காணாமல் போனால்,  100% பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதம் உள்ளது. எனினும் நீங்கள் காணாமல் போவதற்கான வாய்ப்பு குறைவு’ என அறிவித்துள்ளது.


15ம் நூற்றாண்டில் தொடங்கிய பெrமுடா முக்கோண மர்மம் தற்போது வரை நீடிக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள், செயற்கை கோள் படங்களை ஆதாரமாக வைத்து, சில கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்த முக்கோண பகுதியில் மேலுள்ள மேகங்கள் வெடிக்கின்றன என்றும், அதனால், 45 அடி அளவிற்கு அலைகள் எழும்புவதால், இதனை தாக்குபிடிக்க முடியாத கப்பல்களும் விமானங்களும் கடலுக்கடியில் போயிருக்க கூடும் என கூறுகின்றனர்.


மேலும் படிக்க | நடுக்கடலில் தங்க கட்டிகளுடன் சிக்கிய கும்பல் - இலங்கை டூ தமிழ்நாடு என்ன நடக்கிறது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR