World Largest Economy Dream By India: இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இந்தியப் பொருளாதாரம்: மோடி 3.0 என்ற தொலைநோக்கு பார்வையை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார். 
 
இந்திய பொருளாதார வளர்ச்சி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த இலக்கை இந்தியா எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்புகள் நனவாகும் பாதையில் நாடு செல்கிறது. இந்தியாவில் ரயில்கள் மட்டும் புல்லட் வேகத்தில் செல்லவில்லை, இந்தியப் பொருளாதாரமும் புல்லட் ரயிலில் சவாரி செய்கிறது.


இந்தியாவின் கடந்த பத்து ஆண்டு ஆட்சிகளின் சாதனைகளாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொருளாதார முன்னேற்றத்தைச் சுட்டிக் காட்டும் அதேவேளையில், இந்தியாவின் அண்டை நாடுகள் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகின்றன. இந்தியாவை சுற்றி அமைந்துள்ள பாகிஸ்தான் இலங்கை, சீனா மட்டுமல்ல, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளும் தற்போது பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றன.


பாகிஸ்தானில் பணவீக்கம் உச்சத்தில்... 
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து, சுதந்திரம் பெறும்போது இரு புதிய நாடுகளாய் ஒன்றாய் உருவாகின. 77 ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக மாறிய அதே நேரத்தில் பாகிஸ்தான் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கஜானா காலியாக உள்ளது.


மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?


சீனா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் தான் பாகிஸ்தானின் பொருளாதாரம் இயங்குகிறது. நெருக்கடியான இந்த நிலையில் பாகிஸ்தானில் உணவுப் பணவீக்கம் 33.1 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டம் பாகிஸ்தானை திவால்நிலையிலிருந்து காப்பாற்றியது, ஆனால் அங்குள்ள மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.  


பணவீக்கம் குறைவதால் சிக்கலில் சீனா 


கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் திவாலான நிலையில், தற்போது நெருக்கடி சீனாவின் வங்கித் துறைக்கு பரவிவிட்டது. வேலையின்மை உச்சத்தில் உள்ளது என்றால், தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் பணவீக்கத்தால், சீனாவின் கவலைகள் அதிகரித்து வருகின்றன.


சீனாவின் நுகர்வோர் விலைக் குறியீடு ஜனவரியில் 0.8 சதவீதம் சரிந்து 15 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியது. வீழ்ச்சியடைந்து வரும் விலைகள், சீனாவின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், சீன அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன.


கடன் தவணை கட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா 


உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா கடன் வலையில் சிக்கியுள்ளது. 24 ஆண்டுகளில் அமெரிக்காவின் கடன் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடன் 5.7 டிரில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், தற்போது அது 34.2 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் கடன் 54 டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்கலாம் என்ற தகவலை அமெரிக்க காங்கிரஸின் பட்ஜெட் ஆவணங்கள் முன்வைக்கின்றன.


மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை விதிகளை மீறினால் சிக்கல்!!


அமெரிக்காவின் கடன் தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 125% என்ற நிலையில் உள்ளது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் கடன் விகிதம் அதிகரித்து வருகிறது என்ற நிலையில்,  அமெரிக்காவின் இறையாண்மைக் கடனின் மதிப்பீடு AA+ இலிருந்து AAA ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக ஃபிட்ச் (Fitch Ratings (Credit Ratings & Analysis For Financial Markets)) சுட்டிக்காட்டுகிறது.


ராக்கெட் வேகத்தில் இந்திய பொருளாதாரம் 


இந்தியாவின் பொருளாதாரம் துரித கதியில் முன்னேறுகிறது. முதலீடு மற்றும் உள்நாட்டு தேவையின் அடிப்படையில் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது என உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2023-24) இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.


வல்லரசு நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமான வேகத்தில் இயங்குகிறது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 3 சதவீதமாக உள்ளது, இது 1993 இல் ஒரு சதவீதமாக மட்டுமே இருந்தது.


இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, இது உலகம் முழுவதிலுமிருந்து நிறுவனங்களை ஈர்க்கிறது. இவற்றின் அடிப்படையில் பார்த்தால், 2060-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கள் உண்மையாகும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.


மேலும் படிக்க | Modi 3.0... பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் புல்லட் ரயில்... ரயில்வே அமைச்சர் பகிர்ந்த வீடியோ!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ