சிரியாவின் வடக்கு பகுதியில் நடந்த வான் தாக்குதலில் இடிந்து தரை மட்டமான கட்டடம் ஒன்றில், உயிருடன் மீட்கப்பட்ட 5 சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிரியாவின் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள போர் களம் நிறைந்த பகுதி. இங்கு குவாட்ரிஜ் என்ற பகுதி மீது நடந்த வான் தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.


இக்கட்டடத்தில் மீட்புபணிகள் நடந்தன. அப்போது 5 வயது சிறுவன் ஒருவன் கட்டட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டான். அப்போது தலையில் ரத்தக்காயங்களும், உடல் முழுவதும் மண தூசியும் படிந்திருந்தன. சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அவனை அமர வைத்தனர்.


அப்போது நடந்தது அறியாது அந்த சிறுவன் தனது தலையில் வடியும் ரத்தத்தினை கையால் துடைக்கும் காட்சி பரிதாபமாக இருந்தது. இது வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


வீடியோ:-