Mexico Aliens News: அமெரிக்காவைத் தொடர்ந்து, மெக்சிகோ நாடாளுமன்றத்தில் முதல் முறையாக அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்களின் (UFO) சாத்தியக்கூறுகள் குறித்த விசாரணை நிகழ்வு நடத்தப்பட்டது. அதாவது நேற்று (செப்டம்பர் 13, செவ்வாய்க்கிழமை) மெக்சிகோவில் வேற்றுகிரகவாசிகள் இருப்பது குறித்து விசாரணை நடைபெற்றது. அதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான "மனிதர் அல்லாத" வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் என்று நம்பப்படும் இரண்டு சடலங்கள் பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன. மேலும் இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் பெருவில் உள்ள ஒரு சுரங்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக மெக்சிகன் பத்திரிகையாளரும், யூஃபாலஜிஸ்ட் ஜெய்ம் மோசன் கூறினார். 


ஏலியன்ஸ் வைரல் வீடியோ:
மம்மி போல இருக்கும் வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. அதுக்குறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள்காட்டப்பட்ட நிகழ்வின் போது அமெரிக்க கடற்படையின் முன்னாள் விமானி ரியான் கிரேவ்ஸும் உடனிருந்தார். அவர் தனது பணியின் போது வேற்று கிரக விண்கலத்தை பார்த்ததாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். 



மேலும் படிக்க - மனித இனத்தின் அழிவு கடும்குளிராலா? 1280 பேரால் மனிதகுலம் உயிர்பிழைத்த வரலாறு


வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஆராய்ச்சி:
மெக்ஸிகோவின் தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் UFO மாதிரிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர் மோசன் கூறினார். இங்கு விஞ்ஞானிகள் ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் டிஎன்ஏவை ஆய்வு செய்தனர். முன்னதாக ஜூலை மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஆராய்ச்சி நடைபெற்றது.


ஏலியன்களை ஆய்வு செய்யும் அமெரிக்கா:
இந்த நேரத்தில், அமெரிக்க கடற்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் டேவிட் க்ரஷ், UFO மற்றும் ஏலியன்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா பல ஆண்டுகளாக மறைத்து வருவதாகக் கூறியிருந்தார்.


அதேபோல முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி கூறுகிறார், வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் 1930 இல் கண்டுபிடிக்கப்பட்டன எனக் கூறினார். மேலும் தான் 2022 இறுதி வரை யுஏபிக்கள் குறித்த்டு அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்திற்காக பகுப்பாய்வு செய்ததாகவும், அந்த ஆராய்ச்சியில் அமெரிக்கா அரசாங்கம் வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்து உள்ளதாகவும், அவர்களின் விண்கலத்தில் ரகசிய ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் கூறி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.



மேலும் படிக்க - K2-18b கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான தடயங்கள் உள்ளது! இது ஏலியன்களின் கிரகமா?


1930 இல் மற்றொரு கிரகத்தில் இருந்து ஒரு விண்கலம் ஒரு விபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக க்ரஷ் பாராளுமன்றத்தில் கூறினார். அதனுடன் ஒரு உடலும் இருந்தது, அது மனிதனுடையது அல்ல. இந்த ஆரய்ச்கியில் நேரடியாக ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள் மூலம் இந்தத் தகவல் கிடைத்ததாக அவர் கூறியிருந்தார். 1930ம் ஆண்டு முதல் அமெரிக்க அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.


பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதாக ஜூன் மாதத்தில் க்ரஷ் கூறியிருந்தார். மேலும் மற்றொரு கிரகம் தொடர்பான மிக முக்கியமான தகவல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்புகளிடம் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க - விண்வெளியில் ஒருவர் இறந்தால்? உடல் பூமிக்கு வருமா? இல்லை திரிசங்கு சொர்க்கமா?


இதற்குப் பிறகு, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இந்த சாம்,பாவம் குறித்து கேட்டனர். குடியரசுக் கட்சியின் தலைவர் புர்செட், வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக தான் நம்புவதாகக் கூறியிருந்தார். க்ரஷ் தவிர, முன்னாள் கடற்படைத் தளபதி டேவிட் ஃப்ரேவர் மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை விமானி ரியான் கிரேவ்ஸ் ஆகியோரும் இந்த விசாரணை குழுவில் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் வேற்று கிரக விண்கலத்தை பார்த்ததாக கூறினர்.


வேற்றுகிரகவாசிகள் மறுக்கும் பென்டகன்:
ஆனால் இவர்களின் கூற்றுக்களை அமெரிக்க பாதுகாப்பு துறை பென்டகன் நிராகரித்துள்ளது. வேற்றுகிரகவாசிகள் தொடர்பான எந்த திட்டத்தையும் அமெரிக்கா இதுவரை இயக்கவில்லை என்றும், தற்போதும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


மேலும் படிக்க - ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்கும் மனிதர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ