ரியாத்: பாலைவனத்துக்கும், கடும் வெப்பத்துக்கும் பெயர் பெற்ற சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும்ன்மகிழ்ச்சியடைந்துள்ளனர். சவூதி அரேபியாவின் வடமேற்கு நகரமான தபூக் நகரில் புத்தாண்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதன் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வீடியோவில், பனிப்பொழிவு ஏற்பட்ட மகிழ்ச்சியில் சவுதி ஆண்கள் பாரம்பரிய நடனம் ஆடுவதைக் காணலாம். தபூக்கில் பனி பொழியும் காட்சிகள் இதற்கு முன்பும் காணப்பட்டாலும், பனிப்பொழிவில் இதுபோன்று இசைக்கு ஏற்ப பாரம்பரிய நடனம் ஆடுபவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பனியால் மூடப்பட்ட மலை


தபூக் அருகே அமைந்துள்ள அல்-லாட்ஜ் மலையில் இந்த பனிப்பொழிவை அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. அப்போது பனிப்பொழிவு கடந்த 50 ஆண்டு கால சாதனையை முறியடித்தது. பிபிசி அறிக்கையின்படி, சவூதி அரசின் செய்தி நிறுவனமான SPA பனியால் மூடப்பட்ட கார்களின் படங்களை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் (Viral Video), மக்கள் பனியை ரசிப்பதைக் காணலாம். ஜபல் அல்-லாஜ், ஜபல் அல்-தாஹிர் மற்றும் ஜபல் அல்கான் ஆகிய மலைகள் முற்றிலும் பனியால் மூடப்பட்டுள்ளன.


ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!


அல்-லாஜ் 2,600 மீட்டர் உயரம் கொண்டது


ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவில், ஜபல் அல்-லாஜ், ஜபல் அல்-தாஹிர் மற்றும் தபூக்கில் உள்ள ஜபல் அல்கான் மலைகள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு பனிpபொழிவு ஏற்படுவதாக, அரபு செய்தித்தாள் Ashraq al-Awsat செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மலைகள் சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளன. ஜபல் அல்-லாஜ் 2,600 மீட்டர் உயரம் கொண்டது. இந்த மலையின் சரிவுகளில் ஏராளமான பாதாம் மரங்கள் நடப்பட்டிருப்பதால் பாதாம் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பருவங்களில் பனிப்பொழிவு ஏற்படுகிறது. தபூக் பகுதி ஜோர்டானை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் பனி உருகிய பிறகு, காணப்படும் காட்சி ஒரு அழகான காட்சி ஆகும்.


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:


 



ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!


பனிப்பொழிவால் ஆச்சர்யம் அடைந்த மக்கள்


சவுதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு வளைகுடா நாடுகளுக்கு மிகவும் அரிதான நிகழ்வாக கூறப்படுகிறது. ஏனென்றால் சில காலத்திற்கு முன்பு இங்கு பனிக்காலம் வந்துவிட்டது. இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசுவதால் பல பகுதிகளில் வெப்பம் மைனஸை எட்டுகிறது. அதே சமயம், புலப்பாடு குறைவாக இருப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சவூதி அரேபியாவின் சிவில் டிஃபென்ஸ் எச்சரித்துள்ளது. ரியாத், மக்கா, மதீனா, கிழக்கு மாகாணம் அல்-பஹா, ஆசிர், ஜசான், அல்-காசிம், தபூக், அல்-ஜவுஃப், ஓலா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR