இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதனால் மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றதும் நாம் அறிந்ததே. அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கோத்தபய ராஜபக்ச, கடந்த 9-ம் தேதி பொதுமக்கள் அதிபர் இல்லத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பொதுமக்களின் போராட்டம் ராஜபக்சக்களுக்கு எதிராக மட்டும் அல்ல. ரணில் விக்கிரமிங்கசிங்கேவுக்கு எதிராகவும் தான் go home gota, go Ranil go ஆகிய முழக்கங்களைத் தான் போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். இலங்கை அதிபர் மாளிகை கைப்பற்றப்பட்டபோது, ரணில் விக்கிரசிங்கவின் வீடும் கொளுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், கோத்தபய ராஜபக்ச பதவி விலகியபோது, மக்களின் விருப்பத்தையும் மீறி இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டர் ரணில் விக்கிரமசிங்க. புதிய அதிபரைத் தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பில் வெற்றி பெற 113 வாக்குகளைப் பெற வேண்டும். நேற்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 223 எம்.பி.க்கள் வாக்களித்தனர். 2 எம்.பி.க்கள் வாக்களிக்காத நிலையில், 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள 219 வாக்குகளில், 134 வாக்குகளைப் பெற்று, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது மக்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக நாடாளுமன்றம் முதல் அதிபர் செயலகம் வரை ராணுவத்தினரும், போலீசும் குவிக்கப்பட்டிருந்ததே ரணிலுக்கு மக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதற்கு சாட்சி. ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதே மக்களின் எண்ணம்.


மேலும் படிக்க | Sri Lankan New President: இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே


மக்கள் ஒன்றை விரும்பும் நிலையில், நாடாளுமன்றம் வேறொன்றை விரும்புவதாகவும், நாடாளுமன்றத்தின் முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இலங்கை மக்கள் கூறியுள்ளனர். மக்கள் விருப்பத்திற்கு மாறாக ரணில் விக்கிரமசிங்க புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். 


மக்களின் எதிர்ப்புக்கு இடையே பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பாரா என்பது அடுத்த கேள்வி. இன்றைய சூழலில் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 360 ரூபாய் ஆகும். பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து, இந்தியா இலங்கைக்கு 3 புள்ளி 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிவாரண உதவியை வழங்கியுள்ளது. Hambantota துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்கு உண்டு என்றாலும், இந்தியா தற்போதைய சூழலில் அதனை கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. 


இலங்கை வெளிநாடுகளிடம் இருந்து வாங்கிய மொத்த கடனில் 15 சதவீதம் சீனாவிடம் இருந்து வாங்கியதாகும். சீனாவுக்கு அடுத்ததாக இலங்கைக்கு அதிகக் கடன் வழங்கிய நாடான ஜப்பான், முறையான அரசு அமையும் வரை மீண்டும் கடன் வழங்க மறுத்துள்ளது இலங்கைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு உள்ள வாய்ப்பு சர்வதேச நாணய நிதியம். 


 இலங்கைக்கான பொருளாதார மீட்புத்தொகை தொடர்பான பேச்சுவார்த்தைள் விரைவில் முடிந்துவிடும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார். இதற்கு முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏழு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.  ஒருவேளை சர்வதேச நாணய நிதியம் உதவி செய்யும் என்றாலும், வரிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட மக்களை பாதிக்கும் நிபந்தனைகளை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் மக்களின் எதிர்ப்பு இன்னமும் அதிகமாகவே செய்யும்.


தற்போதுள்ள சூழலில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்குப்பதே ரணில் விக்கிரமசிங்கேவுக்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படும் நிலையில், அதற்கு இணையாக அவர் அரசியல் நெருக்கடியையும் சந்திக்கவேண்டி இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


மேலும் படிக்க | இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ