Russia Vladimir Putin News: சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் முக்கியமான பொருளாதாரக் கொள்கைதான் Belt and Road Initiative. இதன் நோக்கம் என்பது முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலமாக சீனாவை உலக நாடுகளுடன் நெருக்கமடைய செய்வது. இதில் 150 நாடுகளை உள்ளடக்கியுள்ள சீனா இதற்காக 83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் பெரும்பாலன நிதி, ஆற்றல் மற்றும் போக்குவரத்து வசததிகளை மேம்படுத்தவும் குறிப்பாக மின் உற்பத்தி நிலையங்கள், ரயில் சேவை போன்றவற்றில் செலவிடப்படுகிறது. இந்த திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி மாபெரும் மாநாடு ஒன்றை சீனா நடத்தி வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொண்டுள்ளார். நேற்று (அக்டோபர் 18, புதன்கிழமை ) சீன அதிபர் ஜி ஜிங் பிங் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வந்தார். அங்கு தான் இந்த மர்ம பெட்டி கேமராவில் சிக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பெட்டியில் அணு ஆயுதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. செகெட் (Cheget) பெட்டி என அழைக்கப்படும் இது காகசஸ் மலைகளில் உள்ள செகெட் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பொதுவாக ரஷ்ய அதிபர் எங்கு சென்றாலும், இந்த அணு ஆயுத பெட்டி அவருடனே செல்லுமாம். இந்த பெட்டி இல்லாமல் அதிபர் புடினின் பயணம் முடிவடைவத்தில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். புடினின் பாதுகாப்பு படையினருடன் எப்போதும் 2 கடற்படை அதிகாரிகள் 2 அணு ஆயுத பெட்டிகளை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். மேலும் இதில் நேரடியாக அணு ஆயுதங்கள் இருக்காதாம். மாறாக ஒரு வேளை அணு ஆயுத தாக்குதலை ரஷ்யா நடத்த் வேண்டி வந்தால் அந்த பெட்டியின் வழியாக தான் அதிபர் புடின் சிக்னல் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.



மேலும் படிக்க - காசா மீது தொடரும் தாக்குதல்: அமெரிக்கா அதிபரை அடுத்து இஸ்ரேல் சென்ற பிரிட்டன் பிரதமர்


இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று செகெட் (Cheget) பெட்டி என்பது அடிப்படையில் ஒரு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தகவல் தொடர்பு கருவி என கூறியுள்ளது. மிகவும் ரகசியமன Kazbek என்ற மின்னணு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க் வழியாக இயங்கும் இதன் மூலமாக ரஷ்ய அதிபர் தனது ராணுவ உயர்மட்ட அதிகாரிகளையும் ராக்கெட் படைகளையும் தொடர்பு கொள்ள வழிவகை செய்வதாக கூறப்படுகிறது. இது பற்றி 2019 ஆம் ஆண்டு ரஷ்யாவின் தனியார் தொலைகாட்சி வெளியிட்ட படத்தில் இது ஒரு சிறப்பு ஃபிளாஸ் கார்டு மூலமாக செயல் படுத்தப்படும் என்றும் அணு ஆயுத  பெட்டிக்குள் வரிசையாக பட்டன்கள் உள்ளதையும் அதில் வெள்ளை கலரில் "லான்ச் பட்டன்" மற்றும் சிவப்பு கலரில் "ரத்து பட்டன்" உள்ளதையும் காட்டுகிறது.


இது ஒரு புறம் இருக்க மேலும் சிலரோ அந்த பெட்டியில் புதினின் மலம் சேகரிக்கப்படுவதாக சொல்கின்றனர். புதினின் வெளிநாட்டு பயணங்களின் போது அவர் கழிவறைக்கு சென்றால் அங்கு அவருடன் 6 பேர் சென்று அவர் மலத்தை சேகரித்து ரஷ்யாவுக்கு கொண்டு போய் விடுவார்கள் என கடந்த காலங்களில் செய்தி வெளியானது. ஒரு வேளை இந்த மர்ம பெட்டி அதுவாக கூட இருக்கலாம் என சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.



ரஷ்ய அதிபரிடம்  செகெட் (Cheget) பெட்டி இருப்பதை போல அமெரிக்க அதிபரிடம் அத்தகைய  ரகசிய பெட்டி ஒன்று உள்ளது. அது "அணு கால் பந்து" (Nuclear Football) என்று அழைக்கப்படுகிறது. ஒரு வேளை அமெரிக்காவை தாக்க யாரேனும் நாடுகள் வந்தால் அணு ஆயுத தாக்குதலை நடத்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இது பயன்படுமாம். இந்த பெட்டியில் தகவல் தொடர்பு கருவிகளும் சில கோப்புகளும் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த பெட்டியை திறப்பதற்கான சாவி ரகசிய அட்டை வடிவில் அமெரிக்க அதிபரிடம் பத்திரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடம் ஜி20 மாநாடுக்காக இந்தியா வந்திருந்த போது நாம் பார்த்திருக்க முடியும்.


2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையடுத்து ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த அணு ஆயுத பெட்டிகள் தற்போது மீடியாக்களில் ஸ்பெஷல் கவனம் பெற்று வருகிறது.


மேலும் படிக்க - இஸ்ரேல்- பாலஸ்தீனம் போரை நிறுத்த ரஷ்யா அழைப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ