இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இன்று 13வது நாளாக போர் நடந்து வருகிறது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை அடுத்து, தற்போது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுடன் தங்கள் ஒற்றுமையைக் காட்ட டெல் அவிவ் சென்றடைந்தார். அங்கு அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திது பேச உள்ளார். முன்னதாக, ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்க அங்கு சென்றிருந்தார்.
தனது இஸ்ரேல் பயணத்தைக் குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் X தளத்தில், "நான் இஸ்ரேலில் இருக்கிறேன். இந்த தேசமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நான் உங்கள் சோகத்துடன் பங்கு கொள்கிறேன். பயங்கரவாதத்தின் தீமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன். இன்றும், எப்போதும்" எனப் பதிவிட்டு உள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை சுனக் கண்டிப்பார். இதுதவிர கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் போரில் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார் எனக் கூறப்பட்டு உள்ளது.
பிரிட்டிஷ் PMO அறிக்கையின்படி, எந்தவொரு குடிமகனின் மரணமும் ஒரு சோகம் என்பதை சுனக் வலியுறுத்துவார். ஒரு சர்வதேச சமூகமாக, ஹமாஸின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத்தை பிராந்தியத்தில் அதிகரிப்பதற்கு ஒரு ஊக்கியாக மாற அனுமதிக்கக்கூடாது என்று அவர் சக தலைவர்களிடம் வலியுறுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் மீது புதிய தடைகள்
அதே நேரத்தில், பிடனின் இஸ்ரேல் பயணத்திற்குப் பிறகு, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தடைகள் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டங்களுக்கு விதிக்கப்படும். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு க்ளீன் சிட் கொடுத்த அமெரிக்கா
மறுபுறம், காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் கிளீன் சிட் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று (அக்டோபர் 18, புதன்கிழமை) இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். அப்பொழுது அவர் கூறுகையில், "மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை. வேறொருவரின் கை தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இஸ்ரேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் முற்றாக நிராகரித்தார். இது மட்டுமின்றி, ஹமாஸ் மக்கள் இனப்படுகொலை செய்துவிட்டனர் என்றும் ஜோ பைடன் கூறினார். ஹமாஸ் பாலஸ்தீனம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்த சண்டை இஸ்ரேலுக்கு எளிதானது அல்ல என்பதை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம் எனவும் கூறினார்.
இஸ்ரேலுடன் அமெரிக்கா இருக்கிறது. இஸ்ரேலில் அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதல் 9/11 ஐ விட பெரியது. இது மிகச் சிறிய நாடு, ஒரே தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மனிதர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஹமாஸ் தாக்குதலின் நோக்கம் அழிவே தவிர வேறொன்றுமில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல்
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலில் இருந்து காசா பகுதியில் போர் தொடர்கிறது. ஹமாஸ் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி வருகிறது. அதே நேரத்தில், காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் இதுவரை 4900 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 1400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம் இஸ்ரேலிய தாக்குதலில் 3500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா, பிரிட்டன்
இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து மேற்கத்திய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், காச பகுதியில் இஸ்ரேலின் நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி, மற்ற நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான போரில் இறங்குமோ என்ற அச்சத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் தங்களது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை இஸ்ரேல் எல்லைக்கு அருகில் நிறுத்தியுள்ளன.
காசா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல்
காசா நகரில் உள்ள அஹ்லி அரபு நகர மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹமாஸ் கூறியுள்ளது. அதேநேரம் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் -பாலஸ்தீன அதிபர்
அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பில் 500 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார். அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீதான கொடூர தாக்குதலில் காயமடைந்தவர்கள் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே 30,000 பேர் சிகிச்சை பெற தஞ்சம் அடைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
காசா மருத்துவமனை தாக்குதல் -ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்
இந்த தாக்குதலைக் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் வோல்கர் துர்க் கூறுகையில், "மருத்துவமனைகள் மிகவும் புனிதமானவை. எந்த சூழல்களிலும் பாதுகாக்கப்பட வேண்டியவை. தாக்குதல்களும், படுகொலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குடிமக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் மனிதாபிமான உதவிகள் உரியவர்களை சென்றடைய அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நாடு எப்பொழு உருவாக்கப்பட்டது?
1947 இல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பிரிவினையை முன்மொழிந்தது. இதில் மும்முனைப் பிரிவு குறித்து திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது ஜெருசலேமை சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேசமயம், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் தனி நாடுகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. இம்முறையும் யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அரபுத் தலைவர்கள் அதை எதிர்த்தனர். 1948ல் மே 14 அன்று இஸ்ரேல் நாடு (State of Israel Declare) உருவாக்கப்பட்டது.
மேலும் படிக்க - ஹமாஸ் குழுவை அழித்துவிடுவேன் - ஆவேசத்துடன் இஸ்ரேல் பிரதமர்! என்ன நடக்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ