புதுடெல்லி: 26/11 குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் என்ன செய்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் கானிடம் கேட்கிறார்கள். நவம்பர் 24 ம் தேதி அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில், மும்பை தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை கூறுமாறு கேட்டுக்கொண்டனர்.  Polish MEP Ryszard Czarnecki மற்றும் Italian MEP Fulvio Martusciello ஆகிய இருவரும் இந்த கடிதத்தை எழுதியிருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் பாகிஸ்தான் எதிரான அவர்களின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளனர், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை இஸ்லாமாபாத் இன்னும் சட்டத்தின் முன் கொண்டு வரவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.


"பொதுவாக நாட்டிற்குள் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" என்ற கேள்வியை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற எம்.பிக்கள் கேட்டுள்ளனர்.


2008 நவம்பர் 26 அன்று, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தயிபா (எல்.இ.டி) பயிற்சியளித்த பத்து பயங்கரவாதிகள் மும்பையில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) ரயில் நிலையம், நரிமன் ஹவுஸ் வளாகம், லியோபோல்ட் கஃபே, தாஜ் ஹோட்டல் மற்றும் டவர், ஓபராய்-ட்ரைடென்ட் ஹோட்டல் மற்றும் காமா மருத்துவமனை ஆகியவற்றையும் தெற்கு மும்பையில் உள்ள மற்ற சில முக்கிய இடங்களையும் குறிவைத்தனர்.



 


மும்பை முழுவதும் நான்கு நாட்கள் நீடித்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த  (LeT) பத்து பயங்கரவாதிகள் நடத்தியதில் ஆறு அமெரிக்கர்கள் மற்றும் ஒன்பது பயங்கரவாதிகள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இந்த கொடூரமான தாக்குதல்களை நடத்திய பயங்கரவதிகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் எஞ்சிய அஜ்மல் அமீர் கசாப் (Ajmal Amir Kasab) பிடிபட்டார். 2012 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று புனேவில் உள்ள யெர்வாடா மத்திய சிறையில் Ajmal Amir Kasabக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.,  .


பாகிஸ்தான் குடிமக்கள் இந்த குற்றத்தை செய்யவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பல ஆவணங்களை இந்தியா பகிர்ந்துள்ள போதிலும் பாகிஸ்தான் மும்பை தாக்குதல் தொடர்பாக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முன்னேறவில்லை, ஏனெனில் பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் தொடர்பான கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.  



இந்த ஆண்டு மே மாதம் ஒசாமா பின்லேடனுக்கு ஒரு "தியாகி" என்று பட்டம் கொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "பயங்கரவாதம் என்பது வன்முறையையும் அச்சுறுத்தலையும் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகும், குறிப்பாக பொதுமக்களுக்கு எதிராக." என்று EU Chronicle   தெரிவித்துள்ளது.


"ஐரோப்பிய அரசியல்வாதிகள் என்ற வகையில், பயங்கரவாதத்திற்கும் தீவிரவாத வன்முறைகளுக்கும் எதிராகப் போராடுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பயங்கரவாதத்தைக் கண்டித்து, இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது" என்று அவர்கள் அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளனர். 


"அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கைகளிலிருந்து டி.என்.ஏ, புகைப்படங்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களின் தோற்றத்தை அடையாளம் காணல் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு, தங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் இந்த குற்றங்களில் ஈடுபட்டதை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்  ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் தாக்குதல்களைத் திட்டமிட்ட மூத்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவி செய்தவர்களுக்கு எதிராக இன்றுவரை பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?"என்று அவர்கள் கடிதத்தில் கேட்டுள்ளனர்.  



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR