COVID-19 காரணமாக இதுவரை இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இந்த வைரஸ் காரணமாக ஒரு மில்லியன் மக்கள் தங்கள் உயிர்களை இழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக அதைவிட அதிகமாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களுக்காக போராடி வருகிறார்கள்" என்று டெட்ரோஸ் ஒரு உயர் மட்ட UNGA நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.


கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை செவ்வாயன்று 1 மில்லியனைக் கடந்தது. இந்த வைரஸ் நெருக்கடி முதன் முதலில் துவங்கி சுமார் 9 மாதங்கள் ஆகிவிட்டன. அதி பயங்கர வைரசான COVID-19 வைரஸ், உலகளாவிய பொருளாதாரத்தை (World Economy) பேரழிவிற்குள்ளாக்கியது. உலகத் தலைவர்கள் பலரது உறுதியை அசைத்துப் பார்த்துள்ளது. அரசியலையும் அறிவியலையும் எதிர் எதிராக மோத விட்டுள்ளது. உலக மக்களின் வாழும், கல்வி கற்கும், பணி புரியும் விதங்களை மாற்றியுள்ளது.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் பதிவு செய்யப்பட்ட 1 மில்லியன் என்ற மைல்கல், ஜெருசலேம் அல்லது டெக்சாஸின் ஆஸ்டின் மக்கள்தொகையை விட அதிகமாக உள்ளது. 1969 இல் உட்ஸ்டாக்கில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையை விட இது 2 1/2 மடங்கு அதிகமாகும். இது 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிக என்ணிக்கையாகும்.


ALSO READ: Chennai-யில் பதுங்கியிருந்த கொரோனா புலி மீண்டும் பாய்கிறதா: 24 மணி நேரத்தில் 1000 பேர் பாதிப்பு!!


இதற்கிடையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் (Antonio Guterres), சோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், "உலகளாவிய பொது நன்மைக்கான" தடுப்பு மருந்துக்கான ஆதரவை வழங்குவதற்கும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். "சோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான அணுகலை பெருமளவில் விரிவுபடுத்துவதற்கும், தடுப்பு மருந்தை உலகளாவிய பொது நன்மைக்காக ஆதரிப்பதற்கும், மக்களுக்கான ஒரு தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு அது அனைத்து மக்களுக்கும் அனைத்து இடங்களிலும் கிடைப்பதற்கு வழி செய்வதற்கும், நாடுகள் அனைத்தும் மனிதாபிமான ரீதியாயகவும் பொருளாதார ரீதியாகவும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம்" என்று அவர் கூறினார்.


உலகப் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்தவும், அதிகப்படியான திறன் படைத்த தடுப்பு மருந்து மக்களை அடைவதை உறுதி செய்வதற்கும் ACT முடுக்கி (ACT Accelerator) மட்டுமே பாதுகாப்பான வழி என்று குடெரெஸ் வலியுறுத்தினார். "ACT முடுக்கிக்கான தற்போதைய நிதி இடைவெளி 35 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது உள்நாட்டு ஊக்கப் பொதிகளுக்கு G-20 அரசாங்கங்கள் ஏற்கனவே உறுதி அளித்துள்ளதற்கு 1 சதவீதத்திற்கும் குறைவானது. இதை வேறு விதமாகக் கூறினால், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும், உலகம் சிகரெட்டுக்காக செலவழிக்கும் தொகைக்கு சமமானதாகும் இது. ACT முடுக்கிக்கு முழுமையாக நிதியளிப்பது தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், நம்பிக்கையை மீட்டெடுக்கவும், உலகளாவிய மீட்சியைத் தூண்டவும் உதவும்" என்று அவர் கூறினார்.


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, உலகெங்கிலும் 33,706,888 பேரின் கொரோனா வைரஸ் (Corona Virus) சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளன. இதுவரை 1,009,064 இறப்புகள் பதிவாகியுள்ளன.


ALSO READ: COVID-19 Update: புதிய பாதிப்புகள் 86,821; மொத்த பாதிப்புகள் 63 லட்சத்தை தாண்டியது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR