புது தில்லி: உலக சுகாதார அமைப்பு (WHO) Omicron, டெல்டாவை விட வேகமாக பரவுகிறது என்றும் ஏற்கனவே 89 89 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது என்று  கூறுகிறது. எனவே Omicron மாறுபாடு, தீவிர தொற்று ஏற்படுத்தவில்லை என அலட்சியப்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாறுபாடு டெல்டாவை மிக அதிக வேகமாக பரவுகிறது என்றாலும், அதனைப் போல் தீவிரமானது அல்ல என்று குறிப்பிட்ட WHO, எனினும் Omicron லேசான தொற்று பாதிப்பு ஏற்படுத்தும் மாறுபாடு என்று அலட்சியம்  செய்யாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியது. சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு, தடுப்பூசிகள் போடும் நடவடிக்கையை  தீவிரப்படுத்துமாறு, தென்கிழக்கு ஆசிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.


ALSO READ | Omicron: கவனம் தவறினால் நாளொன்றுக்கு 14 லட்சம் பேர் பாதிக்கப்படலாம், எச்சரிக்கும் நிதி ஆயோக்


"மாஸ்க் அணிதல், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகள் மூலம் Omicron பரவுவதைத் தடுக்க முடியும். தடுக்க வேண்டும்," என்று WHO தெற்கு பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறினார். 


இதற்கிடையில், சனிக்கிழமை (டிசம்பர் 18) இந்தியா ஓமிக்ரான் தொற்று  பாதிப்புகளின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்தது, தெலுங்கானா மாநிலம் 12 புதிய நோய்த் தொற்றுகளைப் பதிவுசெய்தது, மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்புகள் 20 ஆக உள்ளது. இது தவிர, கர்நாடகா மற்றும் கேரளாவில் முறையே ஆறு மற்றும் நான்கு தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் அதிகமான மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.


ALSO READ | Omicron அச்சத்துக்கு மத்தியில் ஆப்பிரிக்காவில் பரவும் மர்ம நோய்: 80 பேர் பலி!!


இந்தியாவில் பரவும் ஓமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும், தொற்றுநோய் நிலைமையை பகுப்பாய்வு செய்வதற்கும், அமைக்கப்பட்ட கோவிட் குழு, ஓமிக்ரான் பரவலால் மூன்றாவது அலையை இந்தியா சந்திக்க நேரிடும் என்றாலும்,கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை போன்று தீவிரமானதாக இல்லாமல், இதமானதாக இருக்கும் என்று கூறியது.


"இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது நாட்டில் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இரண்டாவது அலையை விட இது மிதமானதாக இருக்கும். மூன்றாவது அலை கண்டிப்பாக ஏற்படும். தற்போது தினசரி தொற்று பாதிப்பை பொறுத்தவரை, 7,500-ஐ நெருங்கிவிட்டோம். ஒமிக்ரான் டெல்டாவை விட வேகமாக பரவும் நிலையில்,  தினசரி தொற்று பாதிப்புகள் நிச்சயமாக அதிகரிக்கும்" என்று குழு கூறியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR