குரங்கு அம்மைக்கு புதியப் பெயர் வைக்க ஆலோசனை
Monkey pox : குரங்கு அம்மையின் பெயரை மாற்றவும், இந்த நோயை சித்தரிக்க ஆப்பிரிக்க மக்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.
உலகம் முழுவதும் 39 நாடுகளில் 1,600-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 1,500-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மையின் அறிகுறிகள் உள்ளது. குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.
அண்மையில், ஆப்பிரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள 30 விஞ்ஞானிகள் கொண்ட குழு இந்நோயின் பெயரை மாற்றக்கோரி உலக சுகாதார அமைப்புக்கு கோரிக்கை விடுத்தது. இந்த பெயர் பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று, இந்நோயை சித்தரிக்கவும், நோய் குறித்த செய்திகளின்போதும் ஆப்பிரிக்கர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் எங்கிருந்து பரவத் தொடங்கியது என்பது குறித்த உறுதியானத் தகவல் இல்லை எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரஸ் நம் கணிப்பிற்கு முன்பாகவே மனிதர்களிடத்தில் பரவத் தொடங்கி இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்
ஆனால், இந்த நோயை ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா அல்லது நைஜீரியாவுடன் தொடர்புப்படுத்தும் முயற்சி ஊடகங்களிலும், சில விஞ்ஞானிகளிடத்திலும் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், குரங்கு அம்மையின் பெயரை மாற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், புதிய பெயர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR