அமெரிக்க விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டன! அதிர்ச்சியளிக்கும் 203% வரை கட்டண உயர்வு
US Visa Fees Hike: H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியுள்ளது... எந்த விசாவுக்கு எவ்வளவு கட்டணம் அதிகரிக்கப்பட்டது?
H-1B மற்றும் பிற விசா கட்டணங்களை அதிரடியாக அதிகரித்துள்ளது அமெரிக்கா. அதன்படி, H-1B விசா அல்லது படிவம் I-129க்கான விண்ணப்பக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரும். தற்போது 460 அமெரிக்க டாலர்களாக இருக்கும் விசா கட்டணம் 780 டாலர்களாக அதிகரிக்கப்படுகிறது.
தற்போதையக் கட்டணத்தில் இருந்து 69.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் பலருக்கும் சுமையாக இருக்கும். அமெரிக்க அரசுக்கு கணிசமான வருமானத்தைத் தரும் இந்த விசா கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்தக் கட்டண உயர்வு மட்டுமல்ல, அடுத்த ஆண்டு முதல் H-1B விசாவுக்கான பதிவுக் கட்டணம் 10 அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 215 அமெரிக்க டாலராக உயர்த்தப்படும்.
அதேபோல, புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவான L-1 விசாக்களுக்கான கட்டணம் 460 அமெரிக்க டாலர்களில் இருந்து 1,385 அமெரிக்க டாலராக உயர்கிறது. 201 சதவீதம் உயர்த்தப்படும் கட்டணம், நிறுவனங்களுக்குள் பரிமாற்றம் செய்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விசா என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு அலுவலகங்களில் இருந்து சில ஊழியர்களை அமெரிக்காவில் பணிபுரிய தற்காலிகமாக மாற்ற அனுமதிக்கும் இந்த விசா கட்டண உயர்வு, நிறுவனங்களுக்கு சுமையாக மாறும் என்பதோடு, வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஊழியர்களை பரிமாற்றம் செய்யும் நடைமுறையை பாதிக்கலாம்.
முதலீட்டாளர் விசாக்கள் அல்லது EB-5 விசாக்களுக்கான கட்டணம் 3,675 அமெரிக்க டாலரில் இருந்து 11,160 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 203 சதவீதம் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Work Culture: வாரத்துக்கு 3 நாள் விடுமுறை விட்டா வேலைத்திறன் அதிகரிக்குமா?
விசாக்களுக்கான கட்டண உயர்வு
H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களுக்கான (குடியேற்றம் அல்லாத) கட்டணங்களை அமெரிக்கா கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கட்டண உயர்வு இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விசா கட்டண உயர்வு விவரங்கள்
H-1B விசா/படிவம் I-129க்கான விண்ணப்பக் கட்டணம் - USD 780
அடுத்த ஆண்டு முதல் H-1B பதிவு கட்டணம் - USD 215
L-1 விசாக்கட்டணம் 1,385
முதலீட்டாளர் விசாக்களான EB-5 விசா கட்டணம் USD 11,160
மேலும் படிக்க | ஏழு ரூபாய் மாத வாடகைக்கு வீடு ரெடி! 500 ஆண்டுகளாக வாடகை அதிகரிக்கவே இல்லை!
விசா கட்டணம் ஏன் உயர்வுக்கான காரணம் என்ன?
தற்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள், நிர்வாகச் செலவுகளை சரிகட்ட போதுமானதாக இல்லை என்றும், இதனால் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) துறைக்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்டவே விசா கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் வேலை செய்வதற்கு பிற நாட்டினரை தற்காலிகமாக அனுமதிக்கும் H1B விசா குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்தியாவுக்கே அதிக விசா
அமெரிக்காவின் எச் 1பி விசாவை பயன்படுத்துவதில் இந்தியாவே உலக நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. அமெரிக்க அரசு வழங்கும் இந்த வகை விசாக்களில் 10 சதவிகிதம் இந்தியர்களுக்கே கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், இத்தனை ஆண்டுகள் வழங்கிய விசாக்களின் அளவைவிட, 2023 இல் அதிகமான விசா விண்ணப்பங்களை செயலாக்கியுள்ளது.
விசா கட்டண உயர்வால் இந்தியாவிற்கு பாதிப்பா?
2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் 1.4 மில்லியன் அமெரிக்க விசாக்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு இந்தியாவில் அமெரிக்காவுக்கு செல்வதற்கான விசா விண்ணப்பங்கள், 2022 உடன் ஒப்பிடும்போது விண்ணப்பங்கள் 60% அதிகரித்தது என்பது அமெரிக்காவின் இந்த விசா கட்டண உயர்வுகள் இந்தியர்களை பாதிக்கும் என்பதற்கு போதுமான சான்றாக இருக்கும்.
மேலும் படிக்க | US Visa: ஆன்லைனில் அமெரிக்க விசா ரெனியூவல்! அருமையான வாய்ப்பை தவறவிடவேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ