புதுடெல்லி: இன்று பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வன்முறை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் நாடு முழுவதுக்குமான மொபைல் சேவைகளை அதிகாரிகள் நிறுத்தியது கடும் விமர்சனங்களை பெற்றிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் வாக்குப்பதிவு நாள்


தேர்தல் வாக்குப் பதிவு நாளான இன்று (2024 பிப்ரவரி 8), பயங்கரவாத நடவடிக்கைகள் அண்மையில் அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டிய பாகிஸ்தான் அரசு நிர்வாகம், தேர்தல் நாளில் முழு நாட்டின் மொபைல் போன் சேவையையும் நிறுத்தியது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (Pakistan Tehreek-e-Insaf (PTI)) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People's Party (PPP)) ஆகிய இரு கட்சிகளும் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. 


மொபைல் இணைய சேவை


மொபைல் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டதை கண்டிக்கும் அரசியல் கட்சிகள், இது தேர்தல்களில் மோசடி செய்வதற்கான முக்கியமான முதல்கட்ட நடவடிக்கை என பரவலாகக் குற்றம் சாட்டுகின்றன. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் மொபைல் போன் சேவைகளை தடை செய்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | இஸ்லாமிய விதிமுறைகளை மீறிய திருமணம்: இம்ரான் கான் & மனைவிக்கும் ஏழாண்டு சிறை!


பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட வைஃபை கடவுச்சொற்களை அகற்றுமாறு மக்களை வலியுறுத்திய பிடிஐ, இதனால் மக்கள் வாக்குப்பதிவு நடைபெறும்போது இணையத்தை அணுக முடியும் என்று தெரிவித்தது.



சட்டவிரோத மற்றும் பாசிச ஆட்சி, வாக்குப்பதிவு நாளில் பாகிஸ்தான் முழுவதும் செல்போன் சேவைகளை முடக்கியுள்ளது" என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி X ஊடகத்தில் பதிவிட்டுள்ளது. 


"உங்கள் தனிப்பட்ட வைஃபை கணக்குகளில் இருந்து கடவுச்சொற்களை அகற்றுவதன் மூலம் இந்த கோழைத்தனமான செயலை எதிர்கொள்ளலாம்" என்று பிடிஐ கட்சி மக்களிடம் கேட்டுக் கொண்டது.  


மேலும் படிக்க | குழந்தைகளை பார்சலில் அனுப்பிய அமெரிக்கர்கள்..! 1,100 கிலோ மீட்டர் பயணித்த குழந்தை


பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தின் தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழியில், இணையத்தை முடக்குவதற்கு தொடர்பான எந்த உத்தரவும் இல்லை என்ற செய்தியை மேற்கோளிட்டு காட்டிய பிடிஐயின் எக்ஸ் வலைபப்திவு, "தேர்தல் நாளில் இணையச் சேவைகளை தடை செய்வது துரோகம்" என்று விமர்சித்துள்ளது.


"தொலைபேசி சேவையை நிறுத்துவது என்பது குடிமக்களின் உரிமைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பது என்பதுடன், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அராஜக செயல் ஆகும்" என்று வலைப்பதிவு கூறுகிறது. மொபைல் இணைய சேவை தடுக்கப்பட்டதற்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.


பாகிஸ்தான் மக்கள் கட்சியும் மொபைல் போன் சேவைகள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்தது. பாகிஸ்தான் தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (பிபிபி) தேர்தல் களத்தில் உள்ளது. 


தேர்தல் முடிவுகள் 
பாகிஸ்தானில் தேர்தல் முடிந்து 14 நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். பாகிஸ்தாஅன் தேர்தல் சட்டத்தின் 98வது பிரிவின் கீழ், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 14 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதன் அடிப்படையில் பார்த்தால், பிப்ரவரி 8ஆம் தேதியான இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.


மேலும் படிக்க | பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 8! ஆனால் முடிவுகள் எப்போது வெளியாகும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ