சுவிட்சர்லாந்து, ஜெனீவா: அதிகரித்து நோய்த்தொற்றுகள் குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்திய உலக சுகாதார நிறுவனம் இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் உலகளாவிய ஒரு தொற்றுநோய் என அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யு.என். ஏஜென்சியின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "ஆபத்தான அளவில் பரவுதல் மற்றும் வைரசின் தீவிரத்தன்மை போன்றவற்றை தொடர்ந்து WHO கண்காணித்து வருகிறது. அதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்றார்.


எனவே, COVID-19 ஒரு தொற்றுநோயாக வகைப்படுத்தப்படலாம் என்ற மதிப்பீட்டை நாங்கள் செய்துள்ளோம்," என்று ஜெனீவாவில் நடந்த ஒரு மாநாட்டில் அவர் கூறினார்.