Kim Jong Un சிந்திய கண்ணீர்.. என்னப்பா நடக்குது என வியக்கும் உலகம்..!!!
ஹிட்லரை விஞ்சும் அளவிற்கு செயல்படும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கண்ணீரை கண்டு உண்மையில் உலக மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
விந்தையான வட கொரியாவின் (North Korea) அதிபர் கிம் ஜாங் உன் ( Kim Jong Un) , உலக தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவர். அவர் கொடுக்கும் உத்தரவுகளும் அளிக்கும் தீர்ப்புகளும் மிகவும் கொடூரமனவையாகவும் வினோதமானவையாகவும் இருக்கும்.
வட கொரிய அதிபர் தனது எதிராளிகளை, தன்னை எதிர்ப்பவர்களுக்கு வழங்கும் தண்டனைகளை கேட்டால் நமக்கு குலை நடுங்கும். அவரது மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில், தன்னை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவே, பிரான்ஹா வகை மீன்களை (piranha fish) வளர்ப்பதாக கூறப்படுவதுண்டு.
ஹிட்லரை விஞ்சும் அளவிற்கு செயல்படும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கண்ணீரை கண்டு உண்மையில் உலக மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
"எங்கள் மக்கள் வானத்தை விட உயரமான அளவிற்கும், கடல் போன்ற ஆழம் அளவிற்கும், என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், ஆனால் நான் அவர்களுக்கு திருப்திகரமாக வகையில் வாழத் தவறிவிட்டேன். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், ”என்று கொரியா வட அதிபர் கண்ணீர் சிந்தினார். ஆனால், இதை நம்ப முடியாத மக்கள், அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழாத குறையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது கண்ணீர் சிந்தும் வீடியோவை பார்த்து நம்ப முடியாமல் திகைத்து போயுள்ளனர்.
ALSO READ | எங்கள் நாட்டில், கொரோனா இல்லை.. இல்லவே இல்லை : Kim Jong Un
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தனது தேச மக்களிடம் மன்னிப்பு கேட்டார். மக்களுக்கு சேவையாற்றுவதில் சிறந்த வகையில் செயல்படவில்லை என கண்ணீர் சிந்தினார்.
அக்டோபர் 10 ம் தேதி வட கொரியாவின் ஆளும் கட்சியின் 75 வது பிறந்த நிறுவக தினத்தை கொண்டாடுவதற்காக நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உரையாற்றினார். படை வீரர்களின் தியாகங்களுக்கு நன்றி தெரிவித்த அவர், குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தவறியதற்காக மன்னிப்பு கேட்டார். ஒரு வட கொரியர் கூட வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதற்கு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்
ALSO READ | Kim Jong Un: புலி பதுங்கியது எதற்கு? “Sorry" -க்கு பின்னால் உள்ள மர்மம் என்ன?