Pakistan Crisis: கழுதைய வித்து பணம் பண்ணும் பாகிஸ்தான்! பொருளாதார நெருக்கடியின் உச்சம்
Worst Economic Crisis Of Pakistan: நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் கழுதைகளை விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளது! பாகிஸ்தானுக்கு கை கொடுக்க சீனா தயாராக உள்ளது
தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், தற்போது தனது நாட்டு கழுதைகளை விற்க தயாராகி வருகிறது. அவற்றை வாங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்து, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. அந்நாட்டின் நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
சிக்கல்களில் தவிக்கும் பாகிஸ்தான்
மறுபுறம் நாட்டில் அரசியல் நெருக்கடியும் தொடர்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கழுதைகளை விற்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. பாகிஸ்தானிலும் லட்சக்கணக்கான கழுதைகள் உள்ளன. பாகிஸ்தானின் நெருங்கிய நண்பரான சீனா, கழுதைகள் மற்றும் நாய்களை பாகிஸ்தானில் இருந்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் கழுதைகள்
பாகிஸ்தானில் அதிக அளவில் கழுதைகள் இருப்பதும் பிரச்னையாக இருக்கும் நிலையில், பிரச்சனையை தீர்க்கும் அதே சமயத்தில், பணமும் வந்தால் கசக்குமா என்ன? எனவே, சீனாவுக்கு கழுதைகளை விற்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்க பாகிஸ்தான் தயாராகி வருகிறது.
பாகிஸ்தான் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2022-23ல் பாகிஸ்தானில் கழுதைகளின் எண்ணிக்கை 58 லட்சமாக இருந்தது, 2019-20ல் கழுதைகளின் எண்ணிக்கை 55 லட்சமாக இருந்தது. அதாவது பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கழுதைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கழுதைகள் அதிகரிப்புக்கு காரணம் என்ன?
உலக அளவில் கழுதைகள் எண்ணிக்கையில் சீனா முன்னணியில் உள்ளது. பாகிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனாவில் கழுதைகளின் தேவை அதிகமாக உள்ளதால் பாகிஸ்தானில் இருந்து கழுதைகளை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்திருந்தது. 2022 ஆம் ஆண்டு டான் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, நாய்கள் மற்றும் கழுதைகளை, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய சீனா விரும்புகிறது.
சீனாவில் கழுதைகளின் தோலில் இருந்து ஜெலட்டின் எடுக்கப்படுகிறது. ஜெலட்டின் மனித நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. முன்னதாக, புர்கினா பாசோ மற்றும் நைஜீரியாவில் இருந்து கழுதைகளை இறக்குமதி செய்து வந்தது சீனா. இந்த நாடுகளில் கழுதைகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அருகில் உள்ள பாகிஸ்தானில் இருந்து கழுதைகளை இறக்குமதி செய்வது சீனாவுக்கு லாபமாக இருக்கும்.
சீனாவிற்கு இப்படி நன்மை தரும் கழுதைகள், பாகிஸ்தானின் கழுதைகளின் எண்ணிக்கையை குறைக்கும் அதே நேரத்தில், பணத்தையும் சம்பாதித்துத் தரும் என்பதால், கழுதை விற்பனை தொடர்பான ஒப்பந்தங்கள் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க | தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?
அண்மையில், பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நிலையை சமாளிக்கும் வகையில், நியூயார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் ஹோட்டலை பாகிஸ்தான் அரசு குத்தகைக்கு விட்டது.
ஹோட்டலை, நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் 220 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பாகிஸ்தானுக்கு வருவாய் கிடைக்கும்.
ரூஸ்வெல்ட் ஹோட்டலை குத்தகைக்கு விடுவது, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். நாடு திவாலாவதைத் தடுக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அரசு நடத்தும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) 1979 இல் ரூஸ்வெல்ட் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்தது, அதில் நல்ல லாபம் கிடைத்து வந்த நிலையில், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அந்த ஹோட்டலை பாகிஸ்தான் அரசு விலைக்கு வாங்கியது.
பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க்கும் பாகிஸ்தானிடம் அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை வாங்க பணம் இல்லை. ஒரு மாத இறக்குமதிக்கு தேவையான அந்நியச் செலாவணி கூட கையிருப்பில் இல்லாத நிலையில், கழுதைகள் விற்பனை, அந்நாட்டின் நிதிப் பிரச்சனையை சமாளிக்க ஓரளவு பலனளிப்பதாக இருக்கும்.
Pakistan: பொருளாதார சிக்கலின் உச்சம்! சொத்தை மூன்றாண்டு குத்தகைக்கு விட்ட பாகிஸ்தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ