இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 8 போலீசார் உட்பட 10 பேர் பலியாகினர். குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள கபால் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதலை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இரவு 8.20 மணிக்கு தனகா நடந்ததாக தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி இம்தாத் கான் கூறியதாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கட்டிடம் மற்றும் மசூதி உள்ள காவல் நிலையத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் மூன்று கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக பாகிஸ்தானின் கபால் காவல் துறையினர் கூறினார். இந்த வெடிப்புக்குப் பிறகு, மற்ற எல்லா இடங்களிலும் தீ பரவியது. குண்டுவெடிப்பு நடந்தபோது தான் சமையல் அறையில் இருந்ததாக இம்தாத் கான் கூறினார். இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அவர் கூறினார். இடிபாடுகளுக்குள் பலர் புதைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அருகிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் சீன தோட்டக்கள்! பாகிஸ்தானுக்கு உதவுகிறதா சீனா!
பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்
இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிற்கு, பயங்கரவாத தாக்குதல்கள் பிரச்சனைகளை அதிகரித்துள்ளன. மேலும், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலின் பின்னணியில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியாவின் ராஜீய உத்தி! கை விரித்த கிரீஸ்... சிக்கலில் பாகிஸ்தான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ