ட்ரம்ப்-ன் யூடியூப் சேனலும் முடக்கம்; விதிகளை மீறியதாக யூடியூப் நிறுவனம் அதிரடி!!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சேனலை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளது YouTube நிர்வாகம்..!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சேனலை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளது YouTube நிர்வாகம்..!
டிரம்பின் YouTube சேனலில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ வன்முறையைத் தூண்டும் (policy violation) வகையில் இருந்தது என்று யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வீடியோ இப்போது சேனலில் இருந்து அகற்றப்பட்டது என்று கூறியதுடன், அந்த வீடியோவின் தகவல்களை பகிரவும் YouTube மறுத்துவிட்டது. தரக்கொள்கையை மீறியதற்காக வெள்ளை மாளிகையின் சேனலில் இருந்து உள்ளடக்கத்தையும் YouTube நீக்கியது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போது வரை, ட்ரம்பின் (Donald Trump) கணக்குகளை முடக்காத ஒரே பெரிய சமூக ஊடக தளமாக YouTube இருந்தது. ட்ரம்பின் கணக்கை "காலவரையின்றி" Facebook நிறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் டிரம்பின் Twitter கணக்கும் முற்றிலும் முடக்கபட்டுள்ளது.
ALSO READ | அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; என்ன காரணம் தெரியுமா?
"கவனமாக மதிப்பாய்வு செய்தபின், வன்முறைக்கான தற்போதைய சாத்தியங்கள் அடிப்படையில், Donald J. Trump சேனலில் பதிவேற்றப்பட்ட புதிய உள்ளடக்கத்தை அகற்றி, வன்முறையைத் தூண்டும் விதமாக எங்கள் கொள்கைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என YouTube செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக ட்ரம்ப் இனி, YouTube சேனலில் புதிய வீடியோக்களை அல்லது லைவ் ஸ்ட்ரீம்களை குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு பதிவேற்றமுடியாது என்றும் இதுமீண்டும் நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR