Zakir Naik: `அல்லாவை போற்றுபவரை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கொடுமையான தண்டனை கிடைக்கும்`
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக பிரான்சில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இஸ்லாம் மதப் பிரசாரகரான ஜாகிர் நாயக், நஞ்சைக் கக்கும் தனது பேச்சின் மூலம் போராட்டத்தைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்.
புதுடெல்லி: பிரான்சில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இஸ்லாம் மதப் பிரசாரகரான ஜாகிர் நாயக், நஞ்சைக் கக்கும் தனது பேச்சின் மூலம் போராட்டத்தைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்.
பிரான்சு நாட்டு அதிபருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆத்திரமூட்டும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் மட்டுமல்ல, நாட்டின் தலைவர்கள் கூட பிரான்சு நாட்டு அதிபர் இமானுவெல் மக்ரோங்குக்கு எதிராக அனல் கக்கும் வார்த்தைகளை கொட்டி வருகின்றனர்.
இந்த வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஜாகிர் நாயக்கும் இணைந்துவிட்டார்.
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாய்க்,சர்வதேச அளவில் சொற்பொழிவுகளை வழங்குபவர். இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார். அவரது உரைகள் மிகவும் ஆக்ரோஷமானதாகவும், தூண்டுவதாகவும் இருக்கும். எனவே, தற்போது இந்தியா, வங்காளதேசம், ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகளில் ஜாகிர் நாய்க்கின் சொற்பொழிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கடும்போக்கு இஸ்லாமுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு பிற நாடுகளில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இந்தியாவில் அந்த போக்கு இல்லாமல் இருந்தது. தற்போது இந்தியாவில் முஸ்லீம்களை தூண்டும் விதமாக ஜாகிர் நாய்க் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.
தனது பதிவில் குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தைக் குறிப்பிட்டுள்ள ஜாகிர் நாயக், '... ஆனால் அல்லாவின் தூதரை அவதூறு செய்பவர்களுக்கு கடுமையான வேதனையான தண்டனை கிடைக்கும் (... ஆனால் அல்லாஹ்வின் தூதரை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு வேதனையான தண்டனை கிடைக்கும்)' मिलेगी (...But Those who abuse the messenger of allah will have a painful punishment)'.
சமூக ஊடகங்களில் வைரலாகும் ஜாகிர் நாயக்கின் சமீபத்திய பதிவில், அவர் மற்றுமொரு கருத்தையும் எழுதியுள்ளார். 'உண்மையில், அல்லாவையும், அவரது ரசூலையும் அவதூறு செய்பவர்கள் அவர்களுக்கு சாபம் கிடைக்கும். அவர்கள், இந்த உலகத்திலும் தண்டனை கிடைக்கும். அவர்களுக்கு அவமானகரமான தண்டனைத் தயாராக இருக்கும். அல் குர்ஆன் 33:57 '.
அக்டோபர் 28 அன்று ஜாகிர் நாய்க் பதிவிட்டுள்ள இடுகையில், "அல்லாவின் தூதரை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு வேதனையான தண்டனை கிடைக்கும்" என்று எழுதியுள்ளார். இது இந்தியாவிலும் போராட்டங்களை தூண்டிவிடும் நச்சுப் பேச்சாக இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR