புதுடெல்லி: முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளான ஈத் மிலாத்-உன்-நபி (Eid Milad-Un-Nabi) இஸ்லாமியர்களின் சந்திர நாட்காட்டியின் மூன்றாம் மாதத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாள், அக்டோபர் 29ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் தொடங்கி, அக்டோபர் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று முடிவடைகிறது.
மிலாடி நபி என இந்தியாவில் அறியப்படும் Eid Milad-Un-Nabi கொண்டாட்டங்கள் ஏற்கனவே சவுதி அரேபியாவில் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பிற நாடுகளில் இது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும்.
சுன்னி மற்றும் ஷியா பிரிவினர் வெவ்வேறு நாட்களில் மிலாடி நபியைக் கொண்டாடுகின்றனர். இந்த நாளில், முஸ்லீம் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
நபிகள் நாயகம் கருணை மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் நீதியான பாதையை மக்களுக்குக் காட்டினார்.
570 ஆம் ஆண்டில் மக்காவில் (சவுதி அரேபியா) இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதம் ரபீ-உல்-அவல் (Rabee-ul-Awwal) 12 ஆம் நாளில் தீர்க்கதரிசி நபிகள் நாயகம் பிறந்தார் என்று கிடைக்கப்பெற்ற பதிவுகள் கூறுகின்றன. ரபி அல்-அவாலின் 12 வது நாள் ஆரம்பத்தில் நபிகள் நாயகம் இறந்த நாளாக குறிக்கப்பட்டது.
பாரம்பரிய சன்னி மற்றும் ஷியா பிரிவுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் மிலாடி நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என கருதுகின்றனர். ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர்.
13 ஆம் நூற்றாண்டில், இஸ்லாமிய மக்கள் மவ்லித்தை அவரது பிறந்த நாளாக கொண்டாடத் தொடங்கினர் என்றும், பின்னர் இந்த பாரம்பரியம் வெவ்வேறு நாடுகளில் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Read Also | வயதானவர்களை காதலிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இத்தனை நாள் தெரியாமல் போச்சே!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR