ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டி டெல்லியில் உண்ணா விரதம் மேற்கொண்டு வரும் YSRCP உறுப்பினர்களை YS விஜயம்மா அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டி ஆந்திரா உறுப்பினர்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதனால் இரண்டு அவைகளும் தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி விவாதிக்க முடியாத நிலை நிலவியது.


தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த ஆந்திராவின் உறுப்பினர்கள் அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏர்க்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



பின்னர் உள்ளிருப்பு போராட்டமானது, உண்னா விரத போராட்டமாக மாறியது, கடந்த வியாழன் அன்று YSR காங்கிரஸ் கட்சியின் MP-கள் தங்களது ராஜினாமா கடித்ததினையும் வழங்கினர். இந்த ராஜினாமா கோரிக்கை இன்னும் நிலுவையிலேயே உள்ளது. எனினும் தங்களது உண்னா விரத போராட்டத்தினை கைவிடவில்லை.


இந்நிலையில் இன்று YSRCP கௌரவ தலைவரும், முன்னாள் முதல்வர் YSR அவர்களின் மனைவியுமான YS விஜயம்மா அவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் MP -க்கு ஆதரவு தெரிவித்து நேரில் சந்தித்து பேசினார்!